இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, February 07, 2011

நிலக்கரி துகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்-களமிறங்கிய நாகை TNTJ

நாகை மாவட்டம் நாகூர் அருகே அமைந்துள்ள வாஞ்சூரில் அமைந்துள்ள துறைமுகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் நிலக்கரி துகள்கள் காரணமாக அதன் சுற்றுவட்டாரமே மிகுந்த பாதிப்படைந்து வந்தது. அந்த நிலக்கரி துகள் களை ஏற்றிச்செல்வதின் காரணமாக ஏற்படும் மாசுபாட்டினால் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மிகுந்த அவதிக்கும் பெரும் நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்த பிரச்சனையை கையிலெடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதைக் கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கை மேற்கொள்ளும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களை திரட்டி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை 08.02.11 அன்று முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அதிரடியாக அறிவித்தது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் ஆட்டம் கண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்டவர்களை அழைத்து சமதானப்பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்பட்டு பிரச்சனையை சரிசெய்வதாக வாக்குறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்ட்டது. சமதானப்பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்பட்டு மாவட்ட நிர்வாகம் உறுதிமொழி அளித்த உடன்பாடு கடிதம்:




குறித்த காலத்திற்குள் இது சரிசெய்யப்படவில்லையானால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பதை சொல்லிவைக்கிறோம்.

TNTJ வெளியிட்ட போராட்ட அறிவிப்பு நோட்டிஸ்:


No comments:

Post a Comment