இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, February 19, 2011

இன்னும் 25ஆண்டுகளில் கார் விற்பனையில் அமெரிக்காவை இந்தியா விஞ்சும்

நியூயார்க்: இன்னும் 25 ஆண்டுகளில் அமெரிக்கா,சீனாவை பின்னுக்குத் தள்ளி கார் விற்பனையில் இந்தியா முன்னிலை பெறும் என அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கார் விற்பனை சந்தை உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.இதற்கடுத்து,பொருளாதாரத்தில் புதிய வல்லரசாக மாறியுள்ள சீனாவின் கார் விற்பனை சந்தையும் அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது.

இதைத்தொடர்ந்து,இந்தியாவின் கார் விற்பனை சந்தையும் உலகின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக கார் விற்பனையில் கொடிகட்டி பறந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னிலை பெற்று வருகிறது.

இந்திய கார் சந்தையின் அசுர வளர்ச்சி தொடர்ந்தால்,இன்னும் 25 ஆண்டுகளில் கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா,சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி சாதனை படைக்கும் என அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூஸ் அண்ட் ஆம்ப் கன்சல்ட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

"கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கார் உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது.இன்னும் சில ஆண்டுகளில் கார் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று,கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் உள்நாட்டு கார் விற்பனை மற்றும் ஏற்றுமதியை வைத்து பார்க்கும்போது, 2020ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கார் விற்பனை ஆண்டுக்கு 5மில்லியன் கார்கள் என்ற இலக்கை எட்டும்என்று தெரிகிறது.

இது அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 6 மில்லியன் கார்கள் என்ற இலக்கை அடையும்போது,அமெரிக்கா மற்றும் சீனாவை பின்னுக்குத் தள்ளி கார் விற்பனையில் இந்தியா முன்னிலை பெறும்.

இந்தியாவில் கார் உற்பத்திக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக வளர்ந்து வருவதால்,இது நிச்சயம் சாத்தியமாகும் நிலை உள்ளது,"என்று கூறப்பட்டுள்ளது.

THANKS : THATSTAMIL

No comments:

Post a Comment