இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, February 07, 2011

துஆக்கள் PART - 5

16. பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ() தாயிபூ() ஆபி()தூன லிரப்பி()னா ஹாமிதூன்.
பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
17. தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ்       எனக் கூற வேண்டும்.
பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
 அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்  கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ
யர்ஹமு(க்)கல்லாஹ்  எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
  இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா()(க்)கும்
எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!ஆதாரம்: புகாரி 6224
18. பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்) ரப்பீ() லாயிலாஹ இல்லா அன்(த்) கலக்(த்)தனீ வஅன அப்()து(க்) வஅன அலா அஹ்தி(க்) வவஃதி(க்) மஸ்ததஃ(த்)து அவூது பி()(க்) மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ()வு (க்) பி()னிஃமதி(க்) அலய்ய, வஅபூ()வு (க்) பி()தன்பீ() ()க்பி()ர்லீ  ()இன்னஹு லா யஃக்பி()ருத் துனூப() இல்லா அன்(த்)
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.                            
ஆதாரம்: புகாரி 6306 

No comments:

Post a Comment