இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, February 05, 2011

தமிழ்நாட்டில் நோய்க்கு தினமும் 130 குழந்தைகள் பலி; ஆய்வில் வெளியான தகவல்

யுனிசெப் நிறுவனம் இந்தியா முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தியது.

அதில் தமிழ்நாட்டில் கிருமிகள் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடுகள் காரணமாக குழந்தைகள் இறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 130 குழந்தைகள் வரை பலியாகின்றன. இதே போல் நாடு முழுவதும் கிருமி தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு காரணமாக 5 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களை யுனி செப் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஏஞ்செலா வால்க்கர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில் குழந்தைகளுக்கு சத்து குறைபாடு பிரச்சினை உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது.

பாதி குழந்தைகள் சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதை தவிர்க்க வேண்டுமானால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு சத்தான உணவு வகைகள் கொடுக்க வேண்டும். இது குழந்தை இறப்பை தடுக்கும். இதற்கு மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

THANKS : TAMILCNN

No comments:

Post a Comment