இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, February 13, 2011

கணக்கெடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்; மின் கட்டணத்தை முன்னதாகவே இணையதளத்தில் செலுத்தும் வசதி.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் பயன்பெறும் பொருட்டு இணையதளம் மூலம் குறைவழுத்த மின்கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் வங்கி மின்னணு பட்டுவாடா முறையின் மூலம் உயர்வழுத்த மின் கட்டணம் செலுத்தும் வசதி கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இவ்வசதிகள் மூலம் மின் நுகர்வோர்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் தங்களுடைய மின்கட்டணத்தை சிரமமின்றி செலுத்த இயலும்.   மின்நுகர்வோர்கள் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணைய தளம் மூலம் குறைவழுத்த மின்கட்டணத்தை ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ வங்கியின் கடன் அட்டை அல்லது எந்தவொரு வங்கியின் விசா, மாஸ்டர் கார்ட் அல்லது இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் பணஅட்டை அல்லது ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ்வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதள வங்கி சேவையின் மூலம் எளிதாக செலுத்தலாம்.

பாரத ஸ்டேட் வங்கி, கரூர் வைசியா வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகியவை விரைவில் சேர்க்கப்படும். மின்நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு மற்றொரு புதிய திட்டமான 30 நாட்கள் மின் கணக்கீடு மற்றும் 30 நாட்கள் மின் கட்டண வசூல் என்ற முறை சென்னை, ஈரோடு மற்றும் கோவை மண்டலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இம்முறையின் மூலம் நுகர்வோர்கள் மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த மின்நுகர்வோருக்கு மின்னஞ்சல் மூலம் மின் கட்டணம் மற்றும் கட்டண கடைசி தேதி பற்றிய விவரங்கள் முறையாகவும், குறித்த நேரத்திலும் தெரிவிக்கப்படுகின்றன.

மின்நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலம் குறைவழுத்த மின்கட்டண முன்பணம் செலுத்தும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இவ்வசதியின் மூலம் மின்கட்டணம் நிலுவையில்லாத மின் நுகர்வோர்கள் முன்பணம் செலுத்தலாம்.

முன்பணம் செலுத்தப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட மின் கணக்கீடுகளுக்கு உண்டான கட்டணங்கள் தானாகவே முன்பணத்தில் நேர் செய்யப்படும்.  இணையதள வசதியினை மின்நுகர்வோர்கள் பயன்படுத்தி எளிதாக செலுத்தி பயனடையலாம்.

இணையதள இணைப்பை மேம்படுத்த தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இணையதள வசதியுள்ள கணிப்பொறி மூலம் மின்நுகர்வோர்கள் நேரத்தை வீணாக்காமல் எங்கிருந்து வேண்டுமானாலும் மின் கட்டணத்தை சிரமமின்றி செலுத்தலாம்.

No comments:

Post a Comment