இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, December 25, 2013

Monday, September 30, 2013

எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது: முதல்வர்களுக்கு ஷிண்டே கடிதம்.

டெல்லி: தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் கைது செய்யப்படமால் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

அப்பாவி முஸ்லிம் வாலிபர்கள் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. 
 
தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது. தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தாங்கள் வேண்டும் என்றே குறிவைக்கப்படுவதாக சில சிறுபான்மையின வாலிபர்கள் கருதுகின்றனர். தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு தீவிரவாத வழக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும். 
 
தீவிரவாதத்தை ஒடுக்கும்போது சமுதாய நல்லிணக்கத்தை மனதில் வைத்து சட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும். தவறுதலாக கைது செய்யப்படும் சிறுபான்மையினரை உடனே விடுவிப்பதுடன் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அவர்களை தவறுதலாக கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கடந்த மே மாதம் 39 சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷிண்டேவின் இந்த திடீர் உத்தரவுக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

THANKS:THATSTAMIL

Thursday, September 26, 2013

தேர்தலில் அனைத்து வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளருக்கு உண்டு: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. 
 
தேர்தல்களில் யாருக்குமே வாக்களிக்காமல் இருப்பது தொடர்பாக பொதுநலன் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த பொதுநலன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின்படி, தேர்தலில் போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களையுமே நிராகரிக்கிற உரிமை வாக்காளுக்கு உண்டு. 
 
அத்துடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் "மேலே உள்ள வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை" என்பதை பதிவு செய்யக் கூடிய பட்டனையும் தேர்தல் ஆணையம் இணைக்க வேண்டும். மேலும் இப்படி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்கிற வாக்காளர் பற்றிய விவரத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 
மேலும் இப்படி நிராகரிப்பு வசதியை ஏற்படுத்தினால் தேர்தலில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். வேட்பாளர்கள் அனைவரும் நிராகரிக்கப்படுவார்கள் என்ற அச்ச உணர்வால் நேர்மையானவர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதியாக செயல்படும் திறன் கொண்டவர்களை மட்டுமே தேர்தலில் நிற்க வைக்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் கிரிமினல் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

THANKS : THATSTAMIL

 

Friday, September 20, 2013

மாணவர்கள்,ஆசிரியர்கள் பள்ளியில் மொபைல் போன் பயன்படுத்த தடை

சென்னை: பள்ளி கல்வித்துறையில், மொபைல் போன் பயன்படுத்த, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மொபைல் போன் பயன்பாட்டுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மொபைல் போன் அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, தொடக்கக் கல்வித் துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 2007ம் ஆண்டிலேயே, மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும், நகரப் பகுதிகளில் உள்ள, பள்ளி மாணவர்களில் ஒரு சிலர், மொபைல் போனை கொண்டு வருகின்றனர். இதை முற்றிலும் தடுப்பதற்கு, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடவடிக்கை:
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர், வயதில் மிகவும் சிறியவர்கள் என்பதால், இந்த பள்ளிகளில், மொபைல் போன் பயன்பாடு இல்லை என்ற நிலை, இருந்து வந்தது. ஆனால், தற்போது, வயது வித்தியாசம் இன்றி, சிறுவர்களும், மொபைல் போன்களை, அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அரசு பள்ளிகளில், இது போன்ற நிலை இல்லை என, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில், மொபைல் போன் பயன்பாடு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, தற்போது, தொடக்க கல்வித்துறை, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி வளாகத்தில், மொபைல் போன் பயன்படுத்துவதால், மாணவர்களின் கவனம் திசை திரும்புகிறது. எனவே, மாணவ, மாணவியர், பள்ளிக்கு, மொபைல்போன் கொண்டு வராமல் இருக்க, பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர், பெற்றோருக்கு, உரிய அறிவுரை வழங்க வேண்டும்.


ஆசிரியர்களுக்கும் தடை:
வகுப்பு அறைகளில், ஆசிரியர், மொபைல்போனை பயன்படுத்தக் கூடாது; பாடம் நடத்தும்போது, மொபைல் போனை, "சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தகவல் தெரிவித்து, விதிமுறையை, தவறாமல் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

THANKS : DINAMALAR

Thursday, September 19, 2013

கம்ப்யூட்டர் வேலையா?: உங்கள் கண்கள் பத்திரம்

சென்னை: இந்த உலகைப் பார்க்க உதவும் கண்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. அழகிய உலகைப் பார்த்து ரசிக்க ஆண்டவன் கொடுத்த அருட்கொடை தான் கண்கள். அத்தகைய கண்களை நாம் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் காலில் சக்கரம் கட்டியது போல் ஓடுகிறோம். இந்த ஓட்டத்தில் உடல் நலத்தை பேண பலர் தவறி விடுகின்றனர். அதன் பிறகு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை மருத்துவமனையில் கொண்டு போய் கொடுக்கின்றனர். மனிதனுக்கு கண்கள் என்பது மிகவும் முக்கியம். அதை பாதுகாக்க சில எளிய அறிவுரைகள்.

1.காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பலர் வேலை செய்கின்றனர். அவர்களில் பலருக்கு கண் எரிச்சல், வலி ஏற்படுகிறது. டாக்டரிடம் சென்றால் அவர் சொல்லும் முதல் அறிவுரை இது தான் அடிக்கடி கண் சிமிட்டுங்கள் சார். கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்கள் கண்ணை சிமிட்டக் கூட மறந்துவிடுகிறார்கள். தயவு செய்து அவ்வப்போது கண்ணை சிமிட்டி அதை பாதுக்காத்துக் கொள்ளுங்கள்.

2.கம்ப்யூட்டர் வேலை பார்க்கும் நபர்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ள ஆன்ட்டி கிளேர் கண்ணாடி அணியலாமே.

3.கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் இரு உள்ளங்கைகளை நன்றாக தேய்த்து அதை கண்கள் மீது வைக்கலாம்.

4.இருக்கையிலேயே அமர்ந்திருக்காமல் மணிக்கு ஒரு முறையாவது எழுந்து சென்று மரம், செடி கொடிகளைப் பார்த்து கண்ணை ரிலாக்ஸ் செய்யுங்கள்.

5.கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறவர்கள் அதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். லென்ஸை தொடும் முன்பு கையை நன்றாக கழுவவும்.
6.கீரை கண்களின் தோழன் என்றே கூற வேண்டும். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது கீரை சாப்பிடுங்கள். மேலும் தினமும் கேரட் சாப்பிடுவதும் கண்ணுக்கு நல்லது.
THANKS : THATSTAMIL

Tuesday, August 27, 2013

பாதிக்கப்பட்ட பெண்ணே மன்னித்தாலும் கற்பழிப்பு குற்றவாளிகளை சும்மாவிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றவாளி அல்லது குற்றவாளிகளை மன்னித்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிற நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
இது குறித்து தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், கற்பழிப்பு என்பது சமூகத்திற்கு எதிரான குற்றம் ஆகும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளி தான் கெடுத்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தாலும் அவரின் தண்டனையை குறைக்கக் கூடாது. மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் கற்பழிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
 
கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே அந்த குற்றவாளியை மன்னித்தாலும் அவருக்கான தண்டனை குறைக்கக் கூடாது. கற்பழிப்பு வழக்குகளில் பிற நீதிமன்றங்கள் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

THANKS : THATSTAMIL