இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, February 09, 2011

தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு DNA கோளாறே காரணம்

தூங்கி கொண்டிருக்கும் போதே நள்ளிரவில் எழுந்து தானாக நடக்கும் நோயினால் ஒரு சிலர் அவதிப்படுகின்றனர். உலகில் பெரும்பாலும் குழந்தைகள் தான் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரியவர்களில் ஒரு சிலர் தான் அவதிப்படுகின்றனர்.

இது பரம்பரை நோயாக கருதப்படுகிறது. எனவே, இந்த நோய் தாக்கிய குடும்பத்தின் 4 தலைமுறை வாரிசுகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.   அப்போது, தூக்கத்தில் நடக்கும் நோய் ஏற்பட “டி.என்.ஏ” (மரபணு) கோளாறே காரணம் என தெரிய வந்தது.

மரபணுவை தூண்டக்கூடிய குரோமசோம்களில் ஏற்படும் குறைபாடுகளால் தான் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கத்தில் நடக்கும் வியாதி ஏற்படுகிறது. இந்த நோயை குணப்படுத்த முடியும். அதற்கான புதிய சிகிச்சை முறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

THANKS : MAALAIMALAR

No comments:

Post a Comment