இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, February 09, 2011

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைக்கான காலக்கெடு மே 31 வரை நீடிப்பு

பாபர் மசூதி - இராமர் ஜன்ம பூமி வழக்கில் தாங்கள் அளித்த இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உள்ளூர் வழக்குரைஞர் எம்.இஸ்மாயில் ஃபரூக்கியின் 3 மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், வி.கே.தீக்ஷித் ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கின் முக்கிய மனுதாரர்களான இராஜேந்திர சிங், நிர்மோஹி அகாரா அமைப்பு கடவுளான இராம் லாலா விராஜ்மான் ஆகியோரின் மனுக்களின் மீது வழக்குரைஞர் இஸ்மாயில் வழக்கு தொடர்ந்துள்ளார்.



நன்றி : தமிழ் வெப்துனியா.

No comments:

Post a Comment