இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, February 23, 2011

மலட்டுத் தன்மைக்கு புகைப்பிடித்தலும் ஒரு காரணம்

குழந்தைப் பேறு மருத்துவ அறிவியலில், மனைவிக்கு குழந்தைப் பேறு அளிப்பதில் கணவனின் விந்தணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

புகை பிடித்தல், மதுப் பழக்கம், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, மன உளைச்சல் தரும் வேலைகள், உடல் பருமன், போதைப் பொருள்களை பயன்படுத்துதல் ஆகியவை காரணமாக விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இதனால் மலட்டுத்தன்மை உண்டாகிறது.மேலும் எப்போதும் பதற்றத்தோடு வேலை செய்யும் ஆண்களுக்கு, உயிர் அணுக்கள் மிகக் குறைவாக ஆற்றல் குறைவுடன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல், ரசாயன ஆலைகளில் பணிபுரிதல் உள்ளிட்ட தொழில்சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.மேலே குறிப்பிட்ட காரணிகளுள், புகைப் பழக்கம் காரணமாக குழந்தைப் பேறு இல்லாமை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக புகைப் பழக்கம் காரணமாக பெரும்பாலானோருக்கு ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. குழந்தைப் பேறின்மை சிகிச்சை எடுக்க ஆரம்பித்தவுடன், புகைப் பழக்கத்தை கைவிடுவது அவசியம். இல்லையெனில் சிகிச்சை பலன் தராது.

திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்தும் குழந்தைப் பேறு இல்லாத நிலையில், எந்தவிதத் தயக்கமும் இன்றி மனைவியுடன் கணவன் பரிசோதனைக்கு வருவது அவசியம்.

பிறவிக் குறைபாடு இல்லாத நிலையில், மற்ற குறைகளை மருத்துவ ரீதியாக சரி செய்து குழந்தைப் பேறு அளிக்கும் அளவுக்கு குழந்தைப் பேறு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் கவலைப்பட வேண்டாம்.

THANKS : TAMILCNN

No comments:

Post a Comment