இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, July 29, 2012

இனியாவது சிந்திப்பார்களா?

பெண்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஆடைகளை அணிந்து கொண்டு உடல் ‎அழகை வெளிக்காட்டிச் சென்றால் என்ன நடக்கும்? நடக்கக்கூடாதது எல்லாம் ‎நடக்கும்.‎
‎ 
இந்த உண்மையைப் புரிந்து கொள்ள மறுத்தவர்களது மண்டையில் ‎உரைக்கும் வகையில் தற்போது பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ‎அதில் ஒன்றுதான் மத்திய பிரதேச அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பு. இது ‎குறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியை அப்படியே உங்களுக்குத் ‎தருகின்றோம்.‎
ம.பி. அமைச்சர் விஜய்வர்கியா
உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக் கூடாது:‎
‎ 
ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை ‎அணியக்கூடாது என்று மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைசச்ர் ‎கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.‎
‎ 
கடந்த 9ம் தேதி குவாஹாத்தியில் 20 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை ‎நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பாக மத்திய ‎பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ‎கூறுகையில்,‎
‎ 
ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை ‎அணியக்கூடாது. பிறர் தங்களைப் பார்த்தாலே மதிக்கும் அளவுக்கு பெண்கள் ‎உடைகள் இருக்க வேண்டும். அவர்களின் பேஷன், வாழ்க்கை முறை மற்றும் ‎நடத்தை இந்திய கலாச்சாரத்தின்படி இருக்க வேண்டும்.‎
‎ 
ஆனால் துரதிர்ஷடவசமாக பெண்களின் ஆடைகள் ஆண்களைத் தூண்டும் ‎வகையில் உள்ளன என்றார்.‎
‎(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது ‎கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் ‎கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை ‎அல்லாஹ் நன்கறிந்தவன்.‎
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் ‎கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் ‎தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த ‎வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். ‎
அல்குர்-ஆன் 24 : 30, 31‎

THANKS : TNTJ