இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, February 09, 2011

தமிழகத்தில் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்.

2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி இன்று தமிழகத்தில் துவங்கியது.

2011-
ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி இன்று நாடு முழுவதும் துவங்கியது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பணி இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராடசி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கிறார்கள். அனைத்து தகவல்களையும் பெறுவதற்காக ஒவ்வொருவரிடமும் 29 கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அவை: 1. பெயர், 2. குடும்ப தலைவருக்கு உறவு முறை, 3. இனம், 4. பிறந்த தேதி மற்றும் வயது, 5. தற்போதைய திருமண நிலை, 6. திருமணத்தின் போது வயது, 7. மதம், 8. ஷெட்யூல்டு வகுப்பு/ ஷெட்யூல்டு பழங்குடி, 9. மாற்றுத் திறன் (ஊனம்), 10. தாய்மொழி, 11, அறிந்த பிற மொழிகள், 12. எழுத்தறிவு நிலை, 13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை. 14. அதிக பட்ச கல்வி நிலை, 15. கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா. 16. பொருளாதார நடவடிக்கையின் வகை, 17. நபரின் தொழில், 18. தொழில், வியாபாரம், சேவையின் தன்மை, 19. வேலை செய்பவரின் வகை, 20. பொருளீட்டா நடவடிக்கை, 21. வேலை தேடுகின்றாரா, வேலை செய்ய தயாரா, 22. பணி செய்யும் இடத்திற்கு பயணம், 23. பிறந்த தேதி, 24. கடைசியாக வசித்த இடம், 25. இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள், 26. நகரத்தில் இடப்பெயற்சிக்கு பின் வசித்து வரும் காலம், 27.உயிருடன் வாழும் குழந்தைகள், 28. உயிருடன் பிறந்த குழந்தைகள், 29. கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகள்.

கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கான பதில்களை முன்னதாகவே தயாராக வைத்திருந்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யும்மாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

No comments:

Post a Comment