இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, December 13, 2011

மாதம் ரூ.750 பெற்ற உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக அதிகரிப்பு: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  
 
சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.
 
அந்த வகையில் உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பள்ளிவாசல் மற்றும் தர்காக்களில் 20 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 60 வயது நிரம்பிய பேஷ் இமாம்கள், மோதினார்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் முஜாவர்கள் ஆகியோரிடமிருந்து ஓய்வூதியம் பெறுவதற்காக வரப்பெற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளதை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, உலமா ஓய்வூதியப் பயனாளிகளின் எண்ணிக்கையை 2,400-ல் இருந்து 2,600 ஆக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையையும் 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
 
இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3.12 கோடி ரூபாய் செலவாகும்.   இதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய பெருமக்களின் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவரும் வக்ப் வாரியத்தின் நிதிப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, வாரியத்தின் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வண்ணம், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தவும், வக்ப் வாரியத்தில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி காரணமாக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை அறிந்து, அவர்களுடைய ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கும் வகையில், வக்ஃப் வாரியத்திற்கு சிறப்பு ஒட்டு மொத்தத் தொகையாக 3 கோடி ரூபாய் வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இதேபோன்று, வருடந்தோறும் ஹஜ் புனித யாத்திரைக்காக செல்லும் பயணிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான வசதிகளை செய்து தரும் பணியினை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் அன்றாட நிர்வாக செலவு அதிகரித்துள்ளதையும், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு நிதி நெருக்கடியில் உள்ளதையும் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆண்டுதோறும் ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்த ஆணையிட்டுள்ளார்.
 
நன்றி : மாலைமலர்

Saturday, December 10, 2011

உத்தேச அட்டவணை வெளியீடு: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடக்கம்

பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி முடிவடைகிறது. இதற்கான உத்தேச அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிடுவதற்கு முன்பாக உத்தேசமான அட்டவணையை அரசின் ஒப்புதலுக்கு தயாரித்து அனுப்புவது வழக்கம்.
 
அந்த வகையில் பிளஸ்-2 தேர்வுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை தற்போது அனுப்பியுள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம்
2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. 7 லட்சத்து
63 ஆயிரத்து 124 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர். கடந்த வர டத்தை காட்டிலும் 39,579 பேர் கூடுதலாக தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒவ்வொரு தேர்விற்கும் 2 நாட்கள் இடைவெளி விட்டு தேர்வுகள் நடைபெறுகிறது. மாணவர்கள் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுத்துறை இந்த இடைவெளியை கொடுத்துள்ளது. 0.25 கட்- ஆப் மார்க்கில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே 2 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.
 
தேர்வுத்துறை தயாரிக்கும் உத்தேச கால அட்டவணையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதே அட்டவணையை வெளியிட அரசு முடிவு செய்யும். அதனால் இந்த உத்தேச அட்டவணைக்கு ஒப்புதல் அளித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
 
THANKS : MAALAIMALAR

Friday, December 09, 2011

2012: மத்திய அரசு பொதுவிடுமுறை நாட்கள்

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2012 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:

1. ஜனவரி 26 (வியாழன்)   குடியரசு தினம்
2. பிப்ரவரி 5 (ஞாயிறு)   மிலாடி நபி

3. ஏப்ரல் 5 (வியாழன்)   மகாவீர் ஜெயந்தி

4. ஏப்ரல் 6 (வெள்ளி)   புனித வெள்ளி

5. ஏப்ரல் 13 (வெள்ளி)   விஷு தினம்

6. மே 6 (ஞாயிறு)   புத்த பூர்ணிமா

7. ஆகஸ்ட் 15 (புதன்)   சுதந்திர தினம்

8. ஆகஸ்ட் 20 (திங்கள்)   ரம்ஜான்

9. செப்டம்பர் 19 (புதன்)   விநாயகர் சதுர்த்தி

10. அக்டோபர் 2 (செவ்வாய்)   காந்தி ஜெயந்தி

11. அக்டோபர் 23 (செவ்வாய்)   மகா நவமி

12. அக்டோபர் 24 (புதன்)   விஜயதசமி (தசரா)

13. அக்டோபர் 27 (சனி)   பக்ரீத்

14. நவம்பர் 13 (செவ்வாய்)   தீபாவளி

15. நவம்பர் 25 (ஞாயிறு)   முகரம் பண்டிகை

16. நவம்பர் 28 (புதன்)   குருநானக் பிறந்த நாள்

17. டிசம்பர் 25 (செவ்வாய்)   கிறிஸ்துமஸ் பண்டிகை

மேற்கண்ட தகவலை வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
 

Thursday, December 08, 2011

முஸ்லிம்மை தீவிரவாதி என்பதா? அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம் கடுமை

இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் ‘ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்’ என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.

இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது