இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, December 27, 2010

துஆக்கள் PART - 4

13. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ் பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.               ஆதாரம்: முஸ்லிம் 4915
14. உணவளித்தவருக்காக ஓதும் துஆ:
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா()ரிக் லஹும் பீ()மா ரஸக்தஹும் வஃக்பி()ர் லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
15. பயணத்தின் போது ஓதும் துஆ:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப()ர், அல்லாஹு அக்ப()ர், அல்லாஹு அக்ப()ர் எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
ஸுப்()ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி()னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்) பீ() ஸப()ரினா ஹாதா அல்பி()ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப()ரனா ஹாதா வத்வி அன்னா பு()ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு() பி()ஸ்ஸப()ரி வல் கலீப()(த்)து பி()ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்) மின் வஃஸாயிஸ் ஸப()ரி வகாப ()தில் மன்ளரி வஸுயில் முன்கலபி() பி()ல் மாலி வல் அஹ்லி      எனக் கூறுவார்கள்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.   
ஆதாரம்: முஸ்லிம் 2392

No comments:

Post a Comment