இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, December 18, 2010

சைரன் வைத்த காரில் போகலாம் வாங்க!. பகுதி 2

சில இலவச மற்றும் கட்டண பயிற்சி நிலையங்கள்:

  • மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகம்
  • சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமியில்
  • பி.எல்.ராஜ் மெமோரியல்
  • ஃபோகஸ் அகாடெமி
  • ஸ்ட்ரேட்டஜி அகாடெமி
  • அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்

இனி கடந்த இரண்டு வருடங்களாக மத்திய சிவில் சர்விஸ் தேர்வின் முடிவை சுருக்கமாக உங்களுக்கு தருகின்றேன்.

2009 ஆண்டு: ஐ.ஏ.எஸ். தேர்வு நேர்காணல் முடிவுகள்-தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வெற்றி
IAS,IPS நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வென்றுள்ளனர். அகில இந்திய அளவில் டாக்டர் ஷாபேசல் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர் மருத்துவப் பட்டம் பெற்றவர். தமிழகத்தைச் சேர்ந்த லலிதா 12வது ரேங்க்கும், கனகவல்லி 15வது ரேங்க்கும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் 195 பேர் பெண்கள். மேலும், இதில் 30 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர். இவர்களில் 5 பேர் பார்வையற்றவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். தேசிய அளவில் 15வது ரேங்க் பெற்ற கனகவல்லி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக மேம்பாட்டுத் துறையில் பயிற்சி உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர்.
மனிதநேயம் இலவச IAS கல்வியகத்தின் மூலம் 83 மாணவர்கள் நேர்காணலுக்குச் சென்று 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 12வது ரேங்க் பெற்றுள்ள லலிதா இதில் பயிற்சி பெற்றவர் ஆவார். இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். மேலும், சென்னையில் உள்ள சங்கர் IAS அகாடெமியில் படித்த 50 பேரும், பி.எல்.ராஜ் மெமோரியலில் படித்த 22 பேரும், ஃபோகஸ் அகாடெமியில் படித்த செந்தில், சங்கர் கணேஷ் உள்ளிட்ட 15 பேரும், ஸ்ட்ரேட்டஜி அகாடெமியில் படித்த 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள அரசு IAS. பயிற்சி மையத்தில் மாதிரி நேர்காணல் பயிற்சி பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 12-வது ரேங்க் பெற்று சிறப்பிடம் பிடித்த லலிதா, இம்மையத்தில் பயிற்சி பெற்றவர். முதன்முறையாக தேர்வெழுதிய சண்முகப்ரியா (36-வது ரேங்க்), சிவகுமார் (38-வது ரேங்க்), நிவாஸ் (45-வது ரேங்க்), வினோத்ப்ரியா (62-வது ரேங்க்) ஆகியோர் வெற்றிபெற்றதன் மூலம் சிறப்பு சேர்த்துள்ளனர். மேலும், சென்னையில் உள்ள சங்கர் IAS அகாதெமியில் படித்த சுமார் 50 பேரும், பி.எல்.ராஜ் மெம்மோரியலில் படித்த 22 பேரும், ஃபோகஸ் அகாதெமியில் படித்த செந்தில், சங்கர் கணேஷ் உள்ளிட்ட 15 பேரும், ஸ்டேடஜி அகாதெமியில் படித்த 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களில் வெவ்வேறு பாடங்களுக்கு பதிவு செய்து படித்திருப்பதால், எண்ணிக்கை மாறுபடும்.

2008ம் ஆண்டு IAS தேர்வு-தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி!!
கடந்த 2008ம் ஆண்டு நடத்திய முதல்நிலைத் தேர்வில் 3,18,843 பேர் பங்கேற்றனர். இதில் 11,849 பேரே வெற்றி பெற்றனர். இவர்களில் 2,140 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 791 பேர் தேர்ச்சி பெற்று IAS, IPS உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகப் பதவிகளை ஏற்க உள்ளனர். இதில் 625 ஆண்கள், 166 பெண்கள் ஆவர். இந்த 791 பேரில் 96 மாணவ, மாணவிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 8ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். மேலும் தேசிய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் சென்னை அண்ணாநகரில் உள்ள கணேஷ் IAS அகாடெமியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் (29) தேசிய அளவில் 9வது ரேங்க்கைப் பிடித்துள்ளார். இதையடுத்து சென்னை மனித நேயம் அமைப்பு நடத்தும் இலவச IAS பயிற்சி மையத்தில் பயின்ற அருண்சுந்தர் தயாளன் 22வது ரேங்க்கையும், கணேஷ் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சௌம்யா, சுப்ரஜா, ஆனந்த் ஆகியோர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தத்தில் தமிழத்தைப் பொறுத்தவரை கணேஷ் பயிற்சி மையத்தில் பயின்ற 30 பேரும், மனித நேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற 24 பேரும், சங்கர், சத்யா உள்ளிட்ட சில பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் உள்பட 96 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார் கோயிலைச் சேர்ந்த பிரேமி தேசிய அளவில் 329வது ரேங்க்கை பிடித்துள்ளார். இவர் மாத்தூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் ஆவார். இவர் சென்னை மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர். அதே போல மேட்டூர் அணை அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் 345வது ரேங்க்கைப் பெற்றுள்ளார். இவர் கோவை உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்தவர். இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் அகாடெமியில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

IAS படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மனிதநேய அறக்கட்டளை புதிய அறிவிப்பு


IAS படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் இலவச IAS கல்வியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சமுதாய மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய அனைத்து தரப்பு மாணவர்களும் பயனடையும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

2011-ம் ஆண்டு IAS தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்காக தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 2 ஆயிரம் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இறுதியாக ஆயிரத்து 500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 7 மாத காலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள பல மாணவ, மாணவிகள் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனவே இம்மையம் நடத்திய நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று தேர்வு பெற முடியாமல் போன மாணவர்களுக்கு உதவ மனிதநேய அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

அறக்கட்டளையின் நிறுவனர் பரிந்துரைக்கும் பயிற்சி மையத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி சேர்ந்து பயிற்சி பெற புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மனிதநேய அறக்கட்டளை IAS கல்வியகத்தின் தரத்தை பின்பற்றும் ஓரிரு தகுதிவாய்ந்த, ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று விட்டால், பயிற்சிக் கட்டணமாக அவர்கள் செலுத்திய பணத்தை மனிதநேய அறக்கட்டளை திருப்பித் தந்து விடும். தொடர்ந்து முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சியும், தங்குமிட வசதிகளும் செய்து தரப்படும். தமிழக மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது சமீபத்திய மூன்று புகைப்படங்கள், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகிய நகல்களுடன் தன்குறிப்பு (பயோடேட்டா) ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
சைதை சா. துரைசாமியின்
மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வியகம்,
எண்: 28, ஒன்றாவது முதன்மை சாலை,
சி.ஐ.டி. நகர், நந்தனம்.
சென்னை-600 035

இதற்கு எந்தவித நுழைவுத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ கிடையாது. இதற்கான வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கப்படவுள்ளன. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 044-2435 8373, 2275 1002 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 99406 70110, 98401 06162 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள்: 044-2435 8373, 9840106162, 9677028707, 9003375622
இணையதள முகவரி: www.saidais.com மின்னஞ்சல்: manidhaneyam@yahoo.com

No comments:

Post a Comment