இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, December 06, 2010

உலக பொருளாதார நெருக்கடி ஒரு பார்வை - PART 2

ஐரோப்பிய நெருக்கடி : ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுகளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ளது.இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத் தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது "யூரோ' கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும்.இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம். ஜெர்மனி தனது பழைய கரன்சியான "மார்க்'குக்குத் திரும்பலாம் அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் "யூரோ' கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம்.ஒரு முன்னெச்சரிக்கை தான்கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்பு தான்.  முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப் போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும் போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும்.இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும். இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம். ஆனால், அதனாலும் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படாது.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏன்? அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் சில முக்கியமான காரணங்களை முன்வைக்கின்றனர்.
அவை:
* தவறான பொருளாதாரக் கொள்கை. சேமிப்பை விட, முதலீடு மற்றும் செலவழிப்புக்கு அதிக ஊக்கமளித்தது அந்தக் கொள்கை. அங்கு ஒருவர், தன் வாழ்க்கையையே கடனில் கழிக்க வேண்டிய அவல நிலை இதனால் ஏற்பட்டது. தற்போது ஒவ்வொரு அமெரிக்கனின் தலையிலும் 17 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் (36,314 டாலர்) கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
* சந்தையை விட உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், உற்பத்திப் பொருட்களின் தேக்கம். சந்தையின் ஸ்திரத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளாதது.
ஊ இணையதள நிறுவனங்கள், பங்குச் சந்தையில் செய்த மோசடியால் ஏற்பட்ட "டாட் காம் பபுள் நெருக்கடி!' ஊ அமெரிக்காவில் வங்கிகள், கடன் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் முதலீட்டுச் சந்தையிலும் புகுந்ததால், அவற்றோடு, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என சங்கிலித் தொடராக முதலீட்டுச் சந்தை நீண்டது. ஒன்றில் அடி விழுந்ததால் மற்ற அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
*"சப் ப்ரைம்' நெருக்கடியால் வங்கிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என அடுத்தடுத்து அமெரிக்க நிறுவனங்களை வீழ்ச்சியடைய வைத்தது.
* கடந்த 2008-09ல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இயங்கிய ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிரைஸ்லர் ஆகிய மூன்று கார் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் விலை போகாமல் முடங்கின. இதனால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், அங்கு கடந்த மூன்றாண்டுகளில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10 சதவீதத்தையும் தாண்டியது. இந்தாண்டில் தான் அது 9 சதவீதத்திற்கும் குறைவாக ஆகியுள்ளது.
வேறு காரணங்கள்:உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் வேறு சில காரணங்களை கூறினர்.
 அவை :
* வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் "உயிரி எரிபொருள்' (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது.
*உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகை. இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.
* கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லை.
*உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதாரம்.
நிதிக் கொள்கை : உள்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், உலகப் பொருளாதார நிலவரம் இவற்றை அனுசரித்து, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையை வகுக்கும். காலாண்டு தோறும் வகுக்கப்படும் இதில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.அமெரிக்க பெடரல் ரிசர்வ், தன் நிதிக் கொள்கையில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை வீழ்ச்சியை சரிக்கட்ட வட்டி விகிதத்தை ஒன்றரை சதவீதமாகக் குறைத்தது.வட்டி குறைந்தால், வங்கிகளில் கடன் வாங்குவோர் அதிகரிப்பர். அதனால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது தான் பெடரல் ரிசர்வ்-ன் கணிப்பு. ஆனால், அது நேர்மாறாகிப் போனது.   ed;wp : எம்.ஆர்.வெங்கடேஷ்

No comments:

Post a Comment