இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, December 20, 2010

ஓர் அதிர்ச்சி தகவல்...

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக தேசிய குற்றங்கள் பதிவு துறை புதிய பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் 2009-ம் ஆண்டில் நாடு முழுவதும் 21 ஆயிரத்து 397 பெண்கள் கற்பழிக்கப்பட்டிருப்பதாக கூறப் பட்டுள்ளது.

நாட்டிலேயே மத்திய பிரதேச மாநிலத்தில் தான் அதிக கற்பழிப்பு நடக்கிறது. அங்கு கடந்த ஆண்டில் 2937 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 13.7 சதவீத குற்றங்கள் அங்குதான் நடக்கின்றன.

2- வது இடத்தை மேற்கு வங்காளம் பிடித்துள்ளது. அங்கு 2,263 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் 3- வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 1,871 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

மராட்டியத்தில் 1558 பேரும், ராஜஸ்தானில் 1,355 பேரும், பீகாரில் 1,302 பேரும் கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளனர். நாட்டிலேயே நாகலாந்து மாநிலத்தில்தான் கற்பழிப்பு குறைவாக உள்ளது. அங்கு 19 பேர் மட்டுமே இதில் சிக்கியுள்ளனர்.

கற்பழிக்கப்படும் பெண்களில் 57.2 சதவீதம் பேர் 18 வயதில் இருந்து 38 வயதுக்கு உட்பட்டவர்கள். 91 சதவீத கற்பழிப்பு சம்பவங்கள் பெண்களுக்கு அறிமுகம் ஆன வர்களாலேயே நடக்கிறது.

33.1 சதவீத பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களால் கற்பழிக்கப்படுகின்றனர்.

நன்றி : மாலைமலர்

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக!அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி) நூல்: புகாரீ 6016


“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 73

No comments:

Post a Comment