இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, December 05, 2010

துஆக்கள் PART 2

5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பி()ஸ்மில்லாஹி ரப்பி() அவூது பி()(க்) மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
ஆதாரம்: நஸயீ 5391, 5444
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
 
6. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்()தஹ் லீ அப்()வாப() ரஹ்ம(த்)தி(க்)
பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக
ஆதாரம்: முஸ்லிம் 1165
7. தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி()ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
8. உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:
 
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்()துல்லாஹி வரஸுலுஹு
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.                        ஆதாரம்: முஸ்லிம் 345

No comments:

Post a Comment