இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, December 16, 2010

54% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்தவர்கள்தான்...

ஸ்பெக்ட்ரம், நில ஒதுக்கீடு, காமன்வெல் போட்டி என சகல மட்டத்திலும் அரசியல்வாதிகள் ஒருபுறம் ஊழல்களில் திளைத்துக்கொண்டிருக்க, காரியம் நடக்க கொடுத்து தொலைக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு மட்டும் 54 % இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக திடுக்கிட வைக்கிறது ஆய்வறிக்கை ஒன்று! ஜெர்மன் தலைநகர் பெர்லினை சேர்ந்த அரசு சாரா அமைப்பான "டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்' - Transparency International (TI) இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் நான்கில் ஒருவர் காரியம் நடக்க லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

"
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்" நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் லஞ்ச ஊழல் மிகவும் அதிகரித்துவிட்டதாக பத்து பேரில் ஆறு பேர் உலகம் முழுவதும் கருத்து தெரிவித்துள்ளனர்.லஞ்சம் குறித்து உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், கடந்த 12 மாதங்களில் நான்கில் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இவ்வாறு லஞ்சம் கொடுக்கப்பட்டவைகளில் சுகாதாரம் தொடங்கி கல்வி மற்றும் வரித் துறை வரையிலான சேவை நிறுவனங்கள் அடக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலானோர், அதாவது 29 விழுக்காட்டினர், அதிகம் லஞ்சம் வாங்கியவர்களில் காவல்துறையினரே என்று கூறியுள்ளனர்.

2010
ஆம் ஆண்டில் லஞ்சம் கொடுத்துள்ளவர்களில் அதிகம்பேர் ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தியா, ஈராக், லிபேரியா, பாலஸ்தீனம்,செனகெல், சைரா லியோன் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்தான் என்றும், இந்த நாடுகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் மேலே கூறியபடி, 54 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் தங்களது காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக லஞ்சம் கொடுத்துள்ளனர்.

நன்றி : வெப் துனியா

No comments:

Post a Comment