இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, December 01, 2010

துஆக்கள் Part - 1

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
  இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்  என்பதற்காக, அன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.
1. தூங்கும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி()ஸ்மி(க்) அமூ(த்)து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)                      ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
  2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ()ஃத மா அமா(த்)தனா இலைஹின் னுஷுர்
பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.  
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி()(க்) மினல் குபு()ஸி வல் கபா()யிஸி.                             ஆதாரம்: புகாரி 6322
பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:
غُفْرَانَكَ
ஃகுப்()ரான(க்)
பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.                 ஆதாரம்: திர்மிதீ 7
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!

No comments:

Post a Comment