இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, December 19, 2010

ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகிறது

புதுடெல்லி: கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்க ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகிறது. கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக திகழ்கிறது. கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்படுவது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.  கடந்த 2006ம் ஆண்டில் 8.39 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது 2008ம் ஆண்டில் 23 கோடியாக அதிகரித்தது. இந்த ஆண்டில்  கடந்த அக்டோபர் மாதம் வரையில் 21 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 10 லட்சம்  நோட்டுகளில் 8 நோட்டுகள் கள்ளநோட்டுகளாக இருக்கலாம் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. இந்தியாவில் 1,800 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 50  சதவீதம் அதிக மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகள் (ஸி100, ஸி500, 1000).

கள்ளநோட்டுகள் புழக்கத்தை ஒழிக்க,ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கண்ணுக்கு புலப்படாத காந்த ஈர்ப்பு கொண்ட பாதுகாப்பு நூல்,இயந்திரத்தின் உதவியால் படிக்கும் அளவிற்கு ‘மைக்ரோ’ எழுத்துக்கள், எந்த மாறுபட்ட கோணங்களில் பார்க்கும்
  போது மாறுபடும் கலர், காந்த ஈர்ப்பு கொண்ட மெல்லிய உலோக தகடு ஆகியவை கூடுதல் சிறப்பு அம்சங்களாக கொண்டு வரப்படுகின்றன.

மத்திய அரசின் முன்னாள் செயலாளர் ஷீலாபத்ரா பானர்ஜி தலைமையிலான நிபுணர்கள் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, ரூபாய் நோட்டுகளுக்கான இயக்குனரகம் ஒன் றை மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது. ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல், ஆய்வு, மேம்பாடு மற்றும் ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை பற்றி
 கண்காணிக்கவும் நிதியமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து இந்த இயக்குனரகம் செயல்படும்.

நன்றி : தமிழ் CNN

No comments:

Post a Comment