இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, January 11, 2011

ட்ரஸ்ஸ ஒழுங்கா போடுங்க – பெண் ஊழியர்களுக்கு சுவிஸ் வங்கி உத்தரவு!

சமீபத்தில் சுவிஸ் வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு Dress Code என்று சொல்லப்படும் ஆடை ஒழுங்குமுறைகள் குறித்த 43 பக்க விதிகளை வெளியிட்டுள்ளது. இதன் படி தான் தங்களது ஆடைகளை ஆண் பெண் உழியர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் பெண்கள் எடுப்பாக காட்டும் வண்ணம் இருக்கமான ஆடைகளை அணிக் கூடாது,
உள்ளாடைகள் வெளியே தெரியும் வண்ணம் ஆடைகள் இருக்கக் கூடாது, பெண்கள் லூஸான ஆடைகள் தான் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மொத்தத்தில் இருபாலார் ஒருவர் மற்றவரை  ஈர்க்கும் வண்ணம் அங்க அவயங்கள் வெளியே தெரியும் அளவிற்கு ஆடைகள் அணியக் கூடாது என்பது தான் அந்த உத்தரவின் சாராம்சம்.
அறைகுறை ஆடை கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் சர்வசாதாரணமாகிவிட்ட இந்த நிலையில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்போது உணர்ந்து கொண்ட நிறுவனங்களுக்கு இப்போழுது தான் புத்தி வந்துள்ளது.
இதை தான் இஸ்லாம் அன்றிலிருந்து இன்று வரை போதிக்கின்றது.
“தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். எவ்வளவோ ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 4316)
இஸ்லாம் இதை கூறினால் பெண் அடிமைத் தனம் என்று கூறி மேற்கத்திய நாடுகளை உதாரணம் காட்டியவர்கள் இப்போழுது என்ன சொல்லப் போகின்றார்கள் ?
சுவிஸ் வங்கி செய்தது பெண் அடிமைத்தனமா ? அல்லது இருபாலாரையும் பாலுணர்வு ரீதியான தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையா ? அறிவும் சமூக அக்கரையும் உள்ள யாரும் பெண் அடிமைத்தனம் என்று கூறமாட்டார்கள்.!


2 comments:

  1. Always look forward for such nice post & finally I got you. Really very impressive post & glad to read this. Good luck & keep writing such awesome content. Best content & valuable as well. Thanks for sharing this content.
    Web Development Company in Greater Noida
    Software development company In Greater noida

    CMS and ED
    CMSED

    Homoeopathic treatment for Psoriasis in greater noida

    ReplyDelete
  2. i heard about this blog & get actually whatever i was finding. Nice post love to read this blog
    GST consultant In Indore
    digital marketing consultant In Indore

    ReplyDelete