இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, January 17, 2011

அலஹாபாத் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் கண்டனம்!

உத்ரபிரதேச மாநிலத்தில் 17 வயது பெண்னை கடத்தி கற்பழிப்பு செய்தவனை நிரபராதி என தீர்ப்பளித்து அலஹாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அலஹாபத் நீதிமன்றத்தின் இந்த அநியாயத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம்  கடுமையாக கண்டித்துள்ளது.

மேலும் அலஹாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆதாரமில்லாமல் யூகத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்குவது என்பது சரியாக அமல்படுத்தப்படுவதில்லை என்று தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது. அலஹாபாத் நீதிமன்றத்தின் இந்த மேல்நோக்கான (பொடுபோக்கான) செயல்  எங்களை ஆச்சரியப்பட வைக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீபதிகள் அல்தாஃப் ஆலம் மற்றம் லோதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலஹாபாத் நீதிமன்றத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற கண்டனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லும் அளவிற்கு அலஹாபாத்தின் மிகப் பெரும் அநியாயத் தீர்ப்பான பாபர் மஸ்ஜித் தீர்ப்பிற்கு எதிராக  லட்சோப லட்சம் மக்களின்  கண்டனங்கள் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 அன்று உலகிற்கு வெளிவரும் .


No comments:

Post a Comment