இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, June 22, 2011

அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாகாது என்ற சட்டம் குறித்து வரும் அறிவிப்புகள்.

சாதாரண நிலையில் அன்னிய ஆண்/பெண்களின் முகத்தை அன்னிய பெண்/ஆண்கள் சரியான காரணமின்றிப் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்.

ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே! பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதிரியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது.

பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்" என்று ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)

"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மதீ, அபூதாவூத்)

"நானும் மைமூனா(ரலி)வும் நபி(ஸல்) அவர்களிடம் இருந்த போது இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்தார்கள். ஹிஜாப் சம்பந்தமான கட்டளை வந்த பிறகு இது நடந்ததாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''இவரை விட்டும் நீங்கள் இருவரும் மறைந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நான் "அவர் குருடாயிற்றே! அவர் எங்களைப் பார்க்கவோ அறியவோ முடியாதே?'' என்று கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''நீங்கள் இருவரும் குருடிகளா?; நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்டதாக உம்முஸலாமா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால் உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - முஸ்லிம் 2718. திர்மிதீ)

மேற்கண்ட அறிவுரைகளிலிருந்து ஓர் ஆண் அன்னியப் பெண்ணையோ, ஒரு பெண் அன்னிய ஆணையோ அவசியமின்றிப் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். எதிரில் வருவது பெண், அல்லது ஆண் என்று தெரிந்தால் மீண்டும் அந்தப் பெண்ணை/ஆணைப் பார்ப்பதை விட்டும் பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும். இது தான் அன்னியரைக் காண்பதைக் குறித்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்கும் அறிவுரையாகும்.

அவசிய நிமித்தம் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதில் தவறில்லை. மருத்துவரிடம் நோயைச் சொல்லும் போது அவரை நோக்கியே சொல்ல வேண்டியிருக்கும். வியாபாரம், மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் அன்னிய ஆணும் அன்னியப் பெண்ணும் பொது இடங்களில் பணி போன்ற அவசிய நிமித்தம் கருதி நேரடியாக உரையாட வேண்டியச் சந்தர்ப்பம் நிகழுமானால் அதில் தவறில்லை. மார்க்க சம்பந்தமாக பெண்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி கேள்வி கேட்டுள்ளனர். நபி(ஸல்) அவர்களும் பெண்களின் கேள்விகளுக்கு அவர்களை நோக்கி விளக்கமளித்துள்ளார்கள்.

இந்த அறிவிப்புகளிலிருந்து, அன்னியப் பெண்ணைப் பார்க்கலாம், தீய எண்ணத்துடன் - சபலத்துடன் பார்க்கலாகாது. தேவையின்றிப் பார்ப்பதே தடைசெய்யப்பட்டதாகும். என்றே விளங்க முடிகிறது.

மூஃமினான ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் (24:30) என்ற வசனத்தின் கருத்திலிருந்தும் எதிரே வருவது பெண்ணாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என ஒரு முறை பார்ப்பதற்கான அனுமதியாகும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சுமத்திய செய்தியின் அறிவிப்பில் ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ (ரலி) அவர்கள் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் முகத்தைப் பார்த்தே இவர் நபியவர்களின் துணைவியார் என்று தெரிந்து கொள்கிறார். (புகாரி 2661)

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புஃஹாரி-1838)

நபியே நீர் உம்மனைவிகளுக்கும், உன் பெண்மக்களுக்கும்,ஈமான் கொண்டவர்களில் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என ) அறியப்பட்டு,நோவினை செய்யப்படாமல்
இருக்க இது சுலபமான வழியாகும்.மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்.மிக்க அன்புடையவன்.
(அல் குர் ஆன் : 33:59)

இந்த வசனத்தில் உள்ள "தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு"எனற கருத்து,தலையை மறைக்க போடப்படும் துணியை குறிக்கிறது.மேலும் முன்றானை என்ற பதம்,பெண்கள் மார்புப்பகுதியை மறைக்க பயன்படும் ஆடையும் கூட,அப்படி இருக்க,அதுவேறு முன்றானை,தலையில் போடப்படுவது வேறு முன்றானை என பகுக்க இயலவில்லை.

பெண்களின் ஆடையை வல்ல அல்லாஹ்,வரையரை செய்யும் போது,அது,உடல் அங்கங்கள் தெரியாத அளவில் தடிமனான ஆடையாக இருக்க பணிக்கிறான், அப்படிப்பட்ட ஒரு ஆடையே முன்றானையாக பயன்படுத்த முடியும்,அது போன்ற ஓர் ஆடைகொண்டு,முகத்தை மூடுவதாக பொருள் கொண்டால்,பெண்களை மற்றவர்கள் பார்ப்பது இருக்கட்டும்,முதலில் பெண்கள் யாரையும் அல்ல எதையும் பார்க்கமுடியாத சூழல் உருவாகும். அப்படியாயின்,அவர்கள்,வெளியில் செல்லும் போது,பார்வையற்றவரை போலவா சென்றுவர முடியும்..

பெண்கள் விஷயத்தில் அவ்வளவு அருட்கொடைகளை வழங்கியுள்ள வல்ல ரஹ்மான்,இந்த வசனத்தின் மூலம் இது போன்றதொரு பொருள் தந்து,அவர்களை,கூண்டில் அடைக்க எண்ணியிருக்க மாட்டான்.. அல்லாஹ் பேரன்பும் பெரும் கிருபையும் உள்ளவனாயிற்றே...

பார்க்க  (புகாரி 4795)

”நீங்கள் (உங்கள் மனைவியராகிய) அப்பெண் களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 4:19)

இன்று இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறைமறுப்பாளர் களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர் களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது. தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும் வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சை களைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்து பவர்களும் உள்ளனர்.

மனைவி தன் கணவனின் வீட்டை கண்காணிக்கக் கூடியவளாக இருக்கிறாள். தனக்கு கீழே உள்ளவர்களைப் பற்றி அவள் (மறுமையில்) விசாரிக்கப்படுவாள்’ என்று நபி(ஸல் அவர்கள் கூறினார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.” (அல்குர்ஆன் 2:228)

மனைவிக்கு செலவு, ஆடை, வசிக்கும் இடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதை கணவனின் மீது அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான் என்றால் அது அவன் அவளிடமிருந்து இன்பம் அனுபவிப்பதற்காகவும் அவனுக்கு பணிவிடை செய்கிறாள் என்பதற்காகவும், பொதுவாக கணவன் மனைவியரிடையே வழக்கத்தில் உள்ள ஒன்றிற்காகவும்தான்.

ஓர் ஆண் ஒரு அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

.
பார்க்க  (புகாரி 6228)

இதே ஹதீஸ் திர்மிதீயிலும் 811வது ஹதீஸில்

அப்பெண் இளம் பருவத்து பெண்ணாக இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த சம்பவம்.அப்பெண் முகத்தை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் இது இறுதி ஹஜ்ஜின் போது நடந்தது,என குறிப்பிடப்படுவதால்,பர்தாவின் சட்டம் அருளப்பட்ட பின்னரே நடந்தது எனபதை அறியமுடிகிறது.அப்பெண் அன்னிய ஆண்களுக்கு மத்தியில்,சபையில் இருந்துள்ளார் என்பதும் விளங்குகிறது,அவரின் அழகு ஆண்களை கவருவதாக இருந்தது என்பது தெளிவு.

அப்படி இருக்க,அது சமயம் நபியவர்கள்,அப்பெண்ணின் கேள்விக்கே தவிர,வேரெந்த உபதேசமும் கூறவில்லை.முகத்தை அன்னிய ஆண்களுக்கு முன் மூடிக் கொள்ளுங்கள் என்று கூட ஆலொசனை கூறவில்லை.அவரின் முகம் வெளிப்படுவதை அனுமதித்துள்ளார்கள்.

ஆனால் அவரால் கவர்ப் பட்ட,சஹாபியை பார்ப்பதை விட்டும் திருப்பியுள்ள்ளார்கள். இங்கு நபி (ஸல்) அவர்கள் பர்தா சம்பந்தமான ஆண், பெண் சட்டங்களை,முறையாக பேணியுள்ளார்கள்.அதாவது,அல்லாஹ்,அன்னியர்களுக்கு மத்தியில் தானாக வெளிப்படுவதான முகத்தை மறைக்க தேவைஇல்லை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.

ஆண்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை,பின்பற்றாத சஹாபியை அவர் பார்ப்பதை விட்டும் தடுத்துள்ளார்கள். என்பது இதன் மூலம் எனக்கு அறியக்கிடைக்கும் தெளிவு.....
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்.பாங்கும் இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையை துவக்கினார்கள்.பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றி கட்டளையிட்டார்கள்.இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.மக்களுக்கு தேவையான அறிவுரை கூறினார்கள்.

பின்னர்,பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூற்னார்கள்.தர்மம் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்' என்று குறிப்பிட்டார்கள்

அப்போது பெண்கள் பகுதியில் இருந்து,இரண்டு கன்னமும் கருப்பாக இருந்த ஓரு பெண் எழுந்து,ஏன்? என்று கேள்விகேட்டார்கள்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நீங்கள் அதிகமாக குறை சொல்கிறீர்கள்:கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்:ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 1467

இதில் அப்பெண்ணின் முக அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.அதை அறிவிக்கும் நபித்தோழர்,மற்றும் பிலால் ரலி ஆகிய அன்னிய ஆண்களுக்கு மத்தியில் அபெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.

'இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)இ நூல்: திர்மிதி எண்: 1082)

'நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின ஸம்ஆ (ரலி),  நூல்: புஹாரி 4942, 5204)

No comments:

Post a Comment