இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, March 07, 2011

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு ஒரே பொது நுழைவுத்தேர்வு-சுப்ரீம் கோர்ட் அனுமதி

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த முடிவுக்கும் அது அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் முது நிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவெடுத்தது. ஆனால் இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து, இந்த நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பினை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு, மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மருத்துவக் கவுன்சில் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் முது நிலை மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தலாம்.

அரசு நடத்தும் இந்த நுழைவுத் தேர்வு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும். வரும் கல்வியாண்டு முதலே இதை அமல்படுத்தலாம் என்று உத்தரவிட்டது.

நன்றி : தட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment