இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, March 02, 2011

குழந்தைகளை பாராட்ட இனிப்பு கொடுக்காதீர்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

லண்டன்: குழந்தைகளை பாராட்டுவதற்காக பெற்றோர்கள் இனிப்புகள் கொடுப்பது தவறானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள்னர்.

குழந்தைகள் சேட்டை செய்யாமல் இருந்தால், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தால் உடனே பெற்றோர் அவர்களுக்கு இனிப்புகளோ அல்லது நொறுக்குத் தீனியோ கொடுத்து பாராட்டுகின்றனர். இன்னும் சிலர் ஒழுங்காக படித்தால், அடம்பிடிக்காமல் இருந்தால் சாக்லேட் வாங்கித் தருவேன் என்பார்க்ள். அவ்வாறு செய்வது மிகத் தவறு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெற்றோர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் இனிப்பு, நொறுக்குத் தீனி கொடுத்தால் குழந்தைகளுக்கு பருமந்தனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் இந்த பழக்கத்தால் குழந்தைகள் பெரியவர்களானதும் உணவுப் பழக்கம் கெடும், அவர்கள் தன்னம்பிக்கை குறையும் மற்றும் உணவுக் குறைபாடுகள் ஏற்படும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

THANKS : THATS TAMIL

No comments:

Post a Comment