இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, July 09, 2011

முதல் இடத்தை பிடித்த தொழிலாளி மகன் “அப்துல்கலாம் போல் விஞ்ஞானியாக ஆசை”

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் முதல் இடத்தை பிடித்த மாணவர் அசோக்குமார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மணிவாசகம் கூலித்தொழிலாளி. இறந்து விட்டார். தாய் முருகேஸ்வரி கூலிவேலை பார்த்து படிக்க வைக்கிறார்.
 
தமிழ் வழியில் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தார். இவரது திறமையை பார்த்து ஈரோடு தாமரை மெட்ரிக்குலேசன் பள்ளி, பிளஸ்-2வை இலவசமாக கற்றுக் கொடுத்தது.
 
பிளஸ்-2 தேர்வில் 1175 மதிப்பெண்கள் பெற்றார். இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண்கள் பெற்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றார். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததில் 2 மதிப்பெண்கள் கிடைத்தது. இதனால் கம்ப்யூட்டர் சயின்சிலும் 200 மதிப்பெண் பெற்றார்.
 
இதன் மூலம் தரவரிசையில் 37-வது இடத்தில் இருந்த அசோக்குமார் முதல் இடத்தை பிடித்தார். இன்று கவுன்சிலிங்கிற்கு அசோக்குமார் அவரது அண்ணன் சதீஷ்குமாருடன் வந்திருந்தார். முதல் இடத்தை பிடித்தது பற்றி அசோக்குமார் கூறியதாவது:-
 
நான் தமிழ் வழியில்தான் பிளஸ்-2 வரை படித்தேன். முதல் இடத்தை பிடித்தது சந்தோசமாக உள்ளது. எம்.ஐ.டி. கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துள்ளேன். அப்துல்கலாம் போல் பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.

No comments:

Post a Comment