இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, April 27, 2011

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் நீதி…? PART - 1

சமீப காலமாக இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்த்தால் முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவிற்காக போடப்பட்ட திட்டத்திற்குள் அரசாங்கமும், அதிகாரச் சட்டமும், காவல்துறையும், நீதித் துறையும் மூழ்கிக் கொண்டிருக்கிறதோ என்ற எண்ணத் தோன்றுகிறது. 
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளாக சித்தரிக்கும் சித்து விளையாட்டு அமெரிக்கா மற்றும் அதன் கள்ளக் குழந்தையான இஸ்ரேலால் முழு வேகமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. அதற்கு இந்தியா என்ன விதிவிலக்கா? ஆளும் அரசாங்கம் (காங்கிரஸ்) அமெரிக்காவின் கைப்பாவையாகவும், ஆண்ட அரசாங்கம் (பா.ஜ.க.) இஸ்ரேலின் நெருங்கிய நண்பானாகவும் இருக்கிறதே… இதற்கு மேல் என்ன வேண்டும்?

அமெரிக்கா போடும் திட்டங்களுக்கு ஆமா சாமி போடுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தபோது EUM (End Use Monetary)  என்ற ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு இந்திய இறையாண்மையை அமெரிக்காவுக்கு விற்றது.

 இதற்கு எடுத்துகாட்டு. இந்தியாவில் ஏதேனும் ஒரு இடத்தில் குண்டு வெடித்தால் இதற்குக் காரணம் முஸ்லிம்கள் என்று அமெரிக்க உளவுத்துறை கதறுகிறது. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு எந்த விசாரணையும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அள்ளிக்கொண்டு போகிறது இந்திய காவல்துறை.

ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று  கூப்பாடு போட்டே அப்பாவி முஸ்லிம்களை கைக்குள் வைத்திருக்கும் காங்கிரசின் நிலையைப் பார்க்கும்போது இவர்கள் முஸ்லிம் சமூகத்தை நம்ப வைத்து முதுகில் குத்துபவர்கள் என்பதை உணர முடிகிறது.

இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் ஆக்குவதையே இலட்சியமாகக் கொண்டு அரசியல் நடத்தும் சங்கப் பரிவாரக் கட்சியான பா.ஜ.க.வோ இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்காத இந்திய அரசாங்கத்தை இஸ்ரேலுக்கு அடமானம் வைத்தது. ஆயுதம் வாங்குவதில் ஆரம்பித்து, இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது, சாய்பாபா கோயிலுக்கு பாதுகாப்பு கொடுப்பது, விண்ணில் விண்கலங்கள் ஏவுவது  என அனைத்திலும் இஸ்ரேலுடைய தொடர்பை ஏற்படுத்தி இவர்களை நம் வீட்டின் வாசல் வரை கொண்டு வந்து விட்டார்கள்.

 மாதம் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.  தலைவர்கள்  இஸ்ரேல் சென்று விருந்து சாப்பிடுவது, இஸ்ரேலிய அதிகாரிகள் தயான்ந்த சரஸ்வதியின் காலைத் தொட்டுக் கும்பிடுவது என இவர்களது உறவு நீண்டு விட்டது.

இந்த இஸ்ரேலியர்களைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். வாழ்வதற்கு இடம் இல்லாமல் நாடோடிகளாய் அலைந்த காலத்தில் இருக்க இடம் கொடுத்து அரவணைத்த அண்டை வீட்டுக்காரர்களையே அடிமைகளாக்க இப்போது முயற்சி செய்கிறார்களள். அவர்களது உறைவிடங்களையே தமதாக்கிக் கொள்ள விழைகிறார்கள். பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராது, பாவம் வயோதிகர்கள் என்ற எந்த எண்ணமும் இல்லாது நித்தம் நித்தம் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவிகளின் உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடன் உறவு வைத்து இந்தியாவையும் அதில் வாழும் அப்பாவிகளையும் பலிகடாவாக்க நினைக்கிறது அதிகார பாசிச வர்க்கம். அதன் விளைவு இன்று இந்தியாவில் நீதி செத்துக் கொண்டிருக்கிறது. 1400 வருட பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் நம் கையை விட்டுச் சென்று விட்டது.

பாபரிப் பள்ளி ஃபாசிஸ்டுகளின் கையில் சிக்குண்டு கதறியதை.ஒட்டுமொத்த உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அப்படியிருந்தும் நீதி இன்று யார் பக்கம்? 
பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பைக் கேட்ட ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு கேள்வி எழுந்தது. “ராமர் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் பிறந்தார்” என்ற எந்தவொரு ஆதாரமுமில்லாத வாதத்தை வைத்து தீர்ப்பு வழங்கிய நிதீமன்றத்திடம் “நான் சென்னை அரசு மருத்துவமனையில்தான் பிறந்தேன், அதற்கான பிறப்புச் சான்றிதழும் என்னிடம் இருக்கிறது, எனவே சென்னை அரசு மருத்துவமனையை என் பெயருக்கு எழுதித் தர வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்தால் என்ன நடக்கும்?

பாபரி வழக்கில் எவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே போன்ற ஒரு தீர்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வி அமைதியை விரும்பும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆழ்மனதிலும் எழாமல் இல்லை.

அரசாங்கங்களும், நீதித்துறையும் இவ்வாறிருக்க மற்றொரு புறமோ காவல் துறையும், பத்திரிகைத்துறையும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்குவதில் முழு மூச்சுடன் கைகோர்த்து வேலை செய்கின்றன. கஷ்மீரில் குண்டு வெடித்தாலும், கன்னியாகுமரியில் குண்டு வெடித்தாலும் அது முஸ்லிம்களால் மட்டுமே நடத்தப்பட்டது என்ற கோணத்திலேயே விசாரணையைத் தொடங்குகிறது காவல்துறை.

அதற்கு உடந்தையாக பத்திரிகைத்துறையோ வாய்க்குள் நுழையாத புதுப்புது பெயர்களை வைத்து தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அத்தோடு “முஸ்லிம் தீவிரவாதிகள்” என்ற வார்த்தையையும் மறவாமல் இடையே புகுத்தி முஸ்லிம் விரோதப் போக்கை வளர்த்து விடுகிறது.

No comments:

Post a Comment