இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, September 19, 2013

கம்ப்யூட்டர் வேலையா?: உங்கள் கண்கள் பத்திரம்

சென்னை: இந்த உலகைப் பார்க்க உதவும் கண்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. அழகிய உலகைப் பார்த்து ரசிக்க ஆண்டவன் கொடுத்த அருட்கொடை தான் கண்கள். அத்தகைய கண்களை நாம் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் காலில் சக்கரம் கட்டியது போல் ஓடுகிறோம். இந்த ஓட்டத்தில் உடல் நலத்தை பேண பலர் தவறி விடுகின்றனர். அதன் பிறகு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை மருத்துவமனையில் கொண்டு போய் கொடுக்கின்றனர். மனிதனுக்கு கண்கள் என்பது மிகவும் முக்கியம். அதை பாதுகாக்க சில எளிய அறிவுரைகள்.

1.காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பலர் வேலை செய்கின்றனர். அவர்களில் பலருக்கு கண் எரிச்சல், வலி ஏற்படுகிறது. டாக்டரிடம் சென்றால் அவர் சொல்லும் முதல் அறிவுரை இது தான் அடிக்கடி கண் சிமிட்டுங்கள் சார். கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்கள் கண்ணை சிமிட்டக் கூட மறந்துவிடுகிறார்கள். தயவு செய்து அவ்வப்போது கண்ணை சிமிட்டி அதை பாதுக்காத்துக் கொள்ளுங்கள்.

2.கம்ப்யூட்டர் வேலை பார்க்கும் நபர்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ள ஆன்ட்டி கிளேர் கண்ணாடி அணியலாமே.

3.கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் இரு உள்ளங்கைகளை நன்றாக தேய்த்து அதை கண்கள் மீது வைக்கலாம்.

4.இருக்கையிலேயே அமர்ந்திருக்காமல் மணிக்கு ஒரு முறையாவது எழுந்து சென்று மரம், செடி கொடிகளைப் பார்த்து கண்ணை ரிலாக்ஸ் செய்யுங்கள்.

5.கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறவர்கள் அதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். லென்ஸை தொடும் முன்பு கையை நன்றாக கழுவவும்.
6.கீரை கண்களின் தோழன் என்றே கூற வேண்டும். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது கீரை சாப்பிடுங்கள். மேலும் தினமும் கேரட் சாப்பிடுவதும் கண்ணுக்கு நல்லது.
THANKS : THATSTAMIL

No comments:

Post a Comment