இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, September 23, 2012

சிக்கனமா திருமணம் நடத்துங்க: மத்திய அமைச்சர் ‘அட்வைஸ்’

புதுடில்லி:ஆடம்பரமாக செலவு செய்து ஏன் திருமணத்தை நடத்த வேண்டும். ஒரு டீ, ஸ்நாக்ஸ் கொடுத்தே சிக்கனமாக திருமணத்தை நடத்‌தலாமே என மத்திய அமைச்சர் அட்வைஸ் கூறியுள்ளார். இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியதாவது: நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் பாரம்பரிய முறையில் ஆடம்பரமாக நடக்கிறது. இத்திருமணங்களால் செலவு தான் அதிகம், அதிலும் பெண்வீட்டார் தான் திருமணச்செலவுகளால் விழிபிதுங்கிப்போய் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.

பொதுவாக திருமணம் ‌என்றால் வீட்டு முன் பந்தல், சீரியல் செட் ,மைக்செட் என வீண் செலவு தான். நாடு உள்ள தற்போது நிதிநிலைமைக்கு தகுந்தவாறு ஆடம்பர திருமணங்களை தவிர்த்து சிக்கனமான திருமணம் செய்யலாமே.

இதனால் இரு வீட்டாருக்கும் செலவு மிச்சம். எனவே டீ, ஸ்நாக்ஸ் வைத்து திருமணம் நடத்தினாலும் நல்லது தான். அதற்காக ஆடம்பரமாக கொண்டாடுபவர்களை எதிர்க்கவில்லை. தடுத்து நிறுத்தவும் முடியாது. யோசனை தான் சொன்னேன். உதாரணமாக 1960-ம் ஆண்டுகளில் நடந்த சிக்கன திருமண முறைகளை நினைவு கூர்ந்தால் தெரியும். சிக்கன திருமணம் குறித்தும் அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது குறித்தும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment