இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, October 09, 2012

உலகிலேயே இந்தியாவில்தான் மன அழுத்தம் பாதித்தவர்கள் அதிகம்: சுகாதார அமைப்பு ஆய்வில் தகவல்

ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறன்றது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்கொலை எண்ணங்கள், நோய்கள் போன்றவற்றிற்கு காரணமான மன அழுத்தம் ஆண்களைவிட பெண்களிடமே அதிகமாக காணப்படுகின்றது. இதன் பாதிப்பும் பெண்களிடம் 50 சதவிகிதம் அதிக தாக்கத்தை உண்டாக்குகின்றது.

ஆண்களைவிட 3 மடங்கு பெண்கள் சராசரியாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களில் 9 சதவிகிதம் மக்கள், நீண்ட கால மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். கவலை, ஆர்வமின்மை, குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, தூக்கமின்மை, பசியின்மை, களைப்பு, கவனச்சிதைவு போன்றவற்றின் காரணமான நிரந்தர மன அழுத்தத்தால் 36 சதவிகிதம் பேர் துன்பப்படுகின்றனர்.

சராசரியாக 32 வயதை கடந்தவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். 2020-ல் உலகளாவிய வகையில் இயலாமைக்கும், 2030-ல் நோய்களுக்கான பெரிய காரணமாகவும் மன அழுத்தத்தால் ஏற்படும் தாக்கம் ஆதிக்கம் செலுத்தக்கூடும். மன அழுத்தத்திற்கான சிறந்த சிகிச்சை முறைகள் இருந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முன் வருவதில்லை. 

ஆண்டு தோறும் இதனால் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது, தினமும் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இறக்கிறார்கள். இந்த எண்ணிக்கைக்கு 20 மடங்கு அதிகமாக தற்கொலை முயற்சிகளும் நடக்கின்றன. அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். அல்லது அவர்களது முயற்சி தோல்வி அடைகிறது.

மன அழுத்தத்தால் அவர்களுக்கு அதுபோன்ற சிந்தனை வருகிறது. தற்போது உலக மக்கள் தொகையில் 35 கோடி பேர் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியர்களிடையே மன அழுத்த பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக நம் நாட்டில் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி : மாலைமலர் 

No comments:

Post a Comment