இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, May 24, 2011

பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது : மத்திய அரசு கவலை

புதுடில்லி : ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொடர்பான விவரங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், ஆண் - பெண் விகிதாசாரங்களில், பெரிய அளவில் வேறுபாடு இருந்தது தெரியவந்தது. ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், கடந்த சில ஆண்டுகளாக, பெண் குழந்தைகளின் விகிதாசாரம், வீழ்ச்சியடைந்து வருவதும் தெரியவந்தது.இது, மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரதமர் அலுவலகம் சார்பில், உயரதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்காக பயன்படும் "ஸ்கேனிங்' வசதியை, சட்டவிரோதமாக பயன்படுத்தி, கருவிலிருக்கும் குழந்தை, பெண்ணாக இருப்பது தெரியவந்தால், அதை கருவிலேயே அழித்து விடும் நடைமுறை தொடருவதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். மேலும், குழந்தை பிறந்த பின், பெண் குழந்தையாக இருந்தால், அதை இரக்கமின்றி கொல்லும் நடைமுறையும், சில பகுதிகளில் இருப்பது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதியில், மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், கருவை அழிப்பதற்காக மருந்துகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்வது குறித்தும், இது தொடர்பாக சட்டவிதிமுறைகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்புகள், விரைவில் வெளியாகும்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

THANKS : DINAMALAR

No comments:

Post a Comment