இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, January 29, 2012

கடுமையாகிறது போக்குவரத்து விதி!

சென்னை: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் சில சட்டங்களை மாற்றியும், கடுமையாக்கியும் வருகிறது. நாளை முதல் ( திங்கட்கிழமை) அபராத கட்டணம் உயர்த்தி கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அபராத கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

காதை பிளக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தி ஹாரன் அடித்தபடி செல்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். காற்றை மாசுபடுத்தும் வகையில் கரும்புகை வெளியேற்றி செல்லும் வாகனங்களுக்கும் இதே அளவு அபராதத் தொகை விதிக்கப்படும். இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று 34 வகையான விதிமீறல்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு 50 ரூபாய் இருந்த கட்டணம் தற்போது 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் 2-வது முறை சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும். 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடமும் இதேபோன்று அபராதம் வசூலிக்கப்படும்.

சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் விதமாக வேகத்தில் ஓட்டிச்சென்றால், முதல் முறை ரூ.1000, 2-வது முறை ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும். நம்பர் பிளேட் இல்லாமல் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்பவர்களுக்கு நாளை முதல் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் அவர்கள் இதே தவறை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். எப்படியோ போக்குவரத்து போலீசார் பிஸியாகி விடுவர்.

1 comment:

  1. போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த அரசு எடுக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் இதன் மூலம் பெரும்பாலான அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் எனும் கருவியாகவே இதை பயன்படுத்துவார்களே என்ற கவலை என் போன்ற சாமானியர்களுக்கு இல்லாமல் இல்லை.

    ReplyDelete