இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, August 08, 2011

12 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய வாலிபர் பலி!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிஷ் ஸ்டேனிபோர்த் என்ற வாலிபர் மின்னணு திரை விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பான X-BOX வீடியோ கேமில் ஆன்லைன் மூலம் பலருடன் விளையாடி வந்துள்ளார்.

தொடர்ந்து 12 மணிநேரம் விளையாடியதால் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "தொடர்ந்து 12 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடியதால், மூளை செயல்பாடு அதிகரித்து நரம்புகளில் ரத்தம் உறைவு ஏற்பட்டு இறந்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.

ஸ்டேனிபோர்த் தந்தை டேவிட் கூறுகையில், "வீடியோ விளையாட்டு நிறுவனத்தின்மீது எந்தக் குற்றமும் இல்லை. அதை விளையாடியவர் தரப்பையே குற்றம் சாரும். விளையாட்டைச் சாதாரணமாகக் கருதி விளையாடாமல், அதில் மூழ்கி, தொடர்ந்து விளையாடியதால்தான் ஸ்டேனிபோர்த் இறந்தான். இதன்மூலம் அப்படி விளையாடுபவர்களுக்கு ஒரு முன்னுதாரமாக மாறிவிட்டான்" என்றார்.

No comments:

Post a Comment