இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, April 08, 2012

தொடர் தோல்வி நரபலி மோடியின் பிரதமர் கனவு "டமால்"

பிரபல ஆங்கில இதழான 'டைம்' நடத்திய 2012ஆம் ஆண்டின் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவு செய்யும் வாக்கெடுப்புக்கான போட்டியில் குஜராத் முதல்வர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் 2,66,684 'No Way' வாக்குகள் பெற்று 'No' வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்திலும், 2,56,792 'Definitely' வாக்குகள் பெற்று ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். அநாமதேயமான ஒருவர் 3,95,793 'Definitely' வாக்குகள் பெற்று ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் 2,64,193 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். குஜராத் முதல்வர் மோடி நேற்று வரை ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான -மெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் உலகில் எந்த தலைவரும் இது போன்ற மோசடி செய்ததில்லை என்றும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டி இருந்தமை நினைவுகூறத்தக்கது.

Friday, April 06, 2012

சென்னையில் 12 பேர் பாதிப்பு: அரசு பொது மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி இன்று முதல் இலவசமாக போடப்படுகிறது


சென்னையில் 12 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. கோவையில் 10 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். வேலூரில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டது. பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு 'டாமி புளு' மாத்திரை கொடுக்கப்படுகிறது.
 
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 லட்சம் மாத்திரைகள் தயாராக உள்ளன. பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி மருந்தும் உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இதை போட்டுக் கொள்ள ரூ. 500 வரை செலவு ஆகும். சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் இன்று முதல் இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இதற்காக 25 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் பன்றிக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இல்லை. என்றாலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கான 'டாமிபுளு' மாத்திரை தேவையான அளவு உள்ளது. இது போல பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி மருந்தையும் தேவையான அளவு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மருந்து வந்ததும், முக்கிய அரசு மருத்துவ மனைகளிலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி இலவசமாக வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Tuesday, April 03, 2012

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை - மத்திய அரசு ஆலோசனை

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக மெக்கா புனித ஹஜ் பயணம் உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் வரை இந்தியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசின் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த மானிய உதவி கிடைக்கும்.
ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 16 ஆயிரம் மானிய உதவி கொடுக்கப்படுகிறது. ஹஜ் பயணித்தின்போது இந்த நிதிஉதவி கொடுக்கப்படும். கடந்த ஆண்டு இந்த மானிய திட்டம் மூலம் 1.25 லட்சம் பேர் பயன்பெற்றனர்.
இந்த நிலையில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் அளிக்க வேண்டாம் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மானியத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசிடம் இஸ்லாமிய அமைப்புகள் மனு கொடுத்துள்ளன.
 
இதையடுத்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய உதவி வழங்குவதை நிறுத்துவது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, ஹஜ் பயணத்துக்கான மானியம் ரத்து ஆகலாம் என்றார். மத்திய அரசு இதுபற்றி விரைவில் முடிவு செய்யும் என்றார்.

THANKS : MAALAIMALAR.COM