இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, February 28, 2012

BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது.

 BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள்.

மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.

Features:
* இணையத்தில் வேகமாக உலவலாம். யூடியுப் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம், மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.

* கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

* Wifi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.

* பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.

* மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.



Specification:

*    CPU -  IMAP210 1GHz
*    O/S  - Android 2.3
*    RAM  - DDR2 256MB
*    FLASH - 2GB
*    TF card - TF card support to 32G
*    Wifi -  802.11b/g/n
*    LCD resolution -  7” TFT, 16:9, 800*600
*    Touch screen - resistive touch screen
*    G-Sensor  - Rotator screen, 3D games
*    Camera - 0.3MP
*    USB  - USB x 1
*    Battery -  Li-ion 3000mah 5V2A
*    Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
*    Flash Support  - Adode Flash 10.3
*    Email  - Send/receive email online
*    Audio  - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV

முன்பதிவு செய்ய:*    இந்த மலிவு விலை டேப்லேட் கணினிகளை முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்க்கு முதலில் இந்த லிங்கில் PRE-BOOK NOW கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

*    அதில் உள்ள PRE-BOOK NOW என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

* அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit பட்டனை அழுத்தவும்.

* இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் bookking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.

* அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.
*  Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.

* மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே அவர்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண் மூலமாகவோ, ஈமெயில் முகவரி மூலமாகவோ விசாரித்து கொள்ளலாம்.

Thanks- BSNL launches 3 Android tablets, price starts Rs.3250 Pre-Book Now [How-To]

THANKS : MR. SULTHAN

ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம்;

தமிழகத்தில் குடும்ப அப்ட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அளித்துள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது.

மொத்தமுள்ள 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன் லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள்   http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணைய  தள  முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். 

ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.  மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்.

Friday, February 17, 2012

பள்ளியில் சேர்க்க மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் ரூ. 50000 அபராதம்: தமிழக அரசு அதிரடி

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த கல்விச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
 
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் சட்ட விதிகளை மீறினால் விதிக்கப்படும் தண்டனை குறித்து தெரிவித்துள்ளது.
 
அதன் விவரம் வருமாறு:-
 
மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தனியார் பள்ளிகள் தேர்வு எதையும் நடத்தக்கூடாது. இந்த விதியை முதல் முறையாக மீறும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரமும் தொடர்ந்து நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அங்கீகாரம் திரும்பப் பெற்ற பிறகும் பள்ளிகள் பழையபடி செயல்பட்டால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க தாமதம், ஆசிரியர்களின் தவறு ஆகியன மீது பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எந்த குழந்தையையும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலோ, கல்வியாண்டு தொடங்கி 6 மாதம் வரையிலோ பள்ளியில் சேர்க்கலாம். நீட்டிக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். வயது சான்றை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை என்பதற்காக பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு அனுமதி மறுக்கக்கூடாது.
 
தனியார் பள்ளிகளுக்கு அருகாமை பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு 25 சதவித இடஒதுக்கீட்டை முதல் வகுப்பிலோ, எல்.கே.ஜி.யிலோ, மழலையர் வகுப்பிலோ அளிக்க வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு செலுத்தும்.
 
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற குழந்தைகளுக்கான பள்ளி கட்டணத்தை உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர், ஐ.சி.எஸ்.இ. நிர்வாகம் ஆகியோரிடம் கோரிக்கை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
 
இந்த அலுவலர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான செலவீனத்தை கணக்கிட்டு திருப்பி அனுப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவினத்தொகை அல்லது கட்டண நிர்ணயக் குழுவால் அந்த பள்ளிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை, இதில் எது குறைவோ அதை வழங்க வேண்டும்.
 
செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 2 தவணைகளாக இந்த தொகை அரசிடமிருந்து வழங்கப்படும். இந்த ஒதுக் கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை ஜூலை மாதத்தில் அதிகாரிகளுக்கு பள்ளிகள் அனுப்ப வேண்டும்.

Tuesday, February 07, 2012

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!

சென்னை: தலைநகர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது.

கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.

ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.

சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னாலும், அறிவிக்கப்படாமல் கூடுதலாக அரை மணி அல்லது 1 மணிநேரத்துக்கு மின் வெட்டு நிலவுகிறது. எப்போது கேட்டாலும் பராமரிப்பு என காரணம் கூறுகிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.

8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை...

கிராமப் புறங்களின் நிலைமைதான் சொல்லத் தரமற்றுப் போயுள்ளது. சில பகுதிகளில் 6 மணி நேரம், சில மாவடங்களில் 8 மணி நேரம், வேலூர் போன்ற வட மாவட்டங்களில் சில நாட்களில் 12 மணி நேரம் கூட மின்வெட்டு நிலவுகிறது.

பொங்கல் பண்டிகை சமயத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது.

முன்பெல்லாம் என்னதான் மின் தட்டுப்பாடு இருந்தாலும், மழைக்காலத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது. கடந்த திமுக ஆட்சி முழுவதுமே, மழைக் காலங்களில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டோ, 'மழையாவது வெயிலாவது... கட் பண்ணு கரண்டை' என்கிற ரீதியில் நிலைமை உள்ளது. மழை வெளுத்தெடுத்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூட சென்னையில் 2 மணி நேரமும், பிற பகுதிகளில் 6 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது.

குறிப்பாக மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரம் அடியோடு இல்லாமல், மக்கள் லாந்தர்கள், மெழுகுவர்த்திகள், சிம்னி விளக்குகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டை சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகரம், கிராமம் என்ற பேதமின்றி இந்த 8 மணி நேர மின்வெட்டு இருக்கும்.

மின்வெட்டு நேரங்கள்:

காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.

சில பகுதிகளில் காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9 முதல், 10 என, 8 மணி நேரம்.

சென்னையில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக மின்வெட்டு நீடிக்கும் எனத் தெரிகிறது.

தொழில்துறை முடங்கும் நிலை

இந்த மின் வெட்டு காரணமாக தொழில்துறை அடியோடு முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கோவையில் 40000 தொழிற்சாலைகளில் 80 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு தொழில்கள், விசைத் தறிகள் இயக்கம் முடங்கியுள்ளது. ஈரோட்டிலும் நிலைமை மோசமாகியுள்ளது.

அதேநேரம் பெரும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி மின்சாரத்தை தனி வழியில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது!

திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை?

THANKS : THATS TAMIL