இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, August 11, 2013

பெண்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டோ போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது: மத குருமார்கள்

டெல்லி: இந்திய இளைஞர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குருமார்கள் தெரிவித்துள்ளனர். இஸ்லாம் குறித்த சந்தேகங்களை தீர்த்து வைக்க உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரண்டு ஹெல்ப்லைன்களின் தலைவர்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இருப்பது மார்க்கப்படி சரியா, தவறா என்று கேட்டு பலர் போன் செய்து வருகின்றனர். 
 
இது குறித்து சன்னி முஸ்லீம்கள் தலைவர் அப்துல் இர்பான் நைமுல் ஹலிம் பிராக்னி மஹ்லி செய்தியாளர்களிடம் போன் மூலம் கூறுகையில், ஒருவரின் முகத்தை ஃபேஸ்புக்கில் பார்க்க முடியாது. நிஜ வாழ்க்கையில் காதலை, அன்பை தேடுங்கள். ஆன்லைனில் தேடுவதில் பலனில்லை. வியாபார நிமித்தமாக ஒருவர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. பெண்கள் ஃபேஸ்புக்கில் நண்பர்களை தேடுவது சரியல்ல. அதிலும் அவர்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றார். 
 
இது குறித்து ஷியா மௌலானா சைப் அப்பாஸ் நக்வி கூறுகையில், பெண்கள் தங்கள் தந்தை மற்றும் சகோதரர்களைத் தவிர வேறு யாருக்கும் தங்கள் முகத்தை காட்ட அனுமதி இல்லை. அதனால் ஃபேஸ்புக்கில் அவர்கள் புகைப்படங்களை வெளியிடுவது ஹராம். நாங்கள் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் தாலிபான்கள் போன்று சிந்திக்கவில்லை. 
 
ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் இருக்கலாமா என்று இளைஞர்கள் கேட்டால் இருக்கலாம் என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் தங்கள் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடக் கூடாது. இஸ்லாம் பெண்களை புர்கா அணிந்து முகத்தை மறைக்குமாறு கூறுகிறது. அப்படி இருக்க அவர்கள் தங்களின் புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதை எப்படி அனுமதிக்க முடியும். ஆன்லைனில் பல உறவுகள் துவங்கி கசந்துபோனதை பார்த்திருக்கிறோம் என்றார்.
 
THANKS : THATSTAMIL

பொறுப்புள்ள தந்தை, கணவர் மற்றும் அண்ணன் தம்பிக்கு மட்டும் இந்த செய்தி.

Monday, June 03, 2013

பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டுமே... தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாணவிகள் பாலியல் பிரச்சினைக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், இனிமேல் பெண்கள் பள்ளிகள் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 இந்த கல்வியாண்டு முதலே இது அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பெண்கள் பள்ளிகளில் பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும். இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். 
 
அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த கவுன்சிலிங்கின்போதும் அமுல்படுத்தப்படும். மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், டிரான்ஸ்பர் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
THANKS : THATSTAMIL.COM

Friday, April 12, 2013

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுப்பதற்கான சில யோசனைகள்!


பொய் சொல்லக் கூடாது பாப்பா..” என்றான் பாரதி.  இதைப் பாடப் புத்தகங்களில் நாம் படித்திருக்கிறோம். நம் பிள்ளைகளும் படிக்கின்றார்கள். ஆனாலும், பொய் சொல்கிறோம்.  இன்றைய உலகில் பொய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அதற்காக, ஒருக்காலும் பொய் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொய் பேசுபவர் எனத் தெரிந்தால் இந்தச் சமுதாயம் மதிக்காது. பொய் சொல்லாமல் இருப்பது பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. அதை நம் குழந்தைகளிடமிருந்தாவது நடைமுறைப் படுத்துவோம்.
குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுப்பதற்கான சில யோசனைகளைப் பார்ப்போம்.

1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள்.

2. அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா“னு கேக்கும்போது,இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு.

3. உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்).

4. அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள்.

5. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்).

6. குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும்.
7. பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள்.

8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பலவகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.

Friday, January 25, 2013

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு இனி ஒருமுறை மட்டுமே அரசு மானியம்

புதுடெல்லி, ஜன.25-

இஸ்லாமியர்களின் புனிய தலங்களாக கருதப்படும் மக்கா, மதீனா நகரங்களுக்கு உலக நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் ‘ஹஜ்’ புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வகையில், இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.

ஏற்கெனவே ஒருமுறை ஹஜ் யாத்திரை சென்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மறுமுறையும் அரசின் மானிய உதவியுடன் ஹஜ் பயணம் செல்ல முன்னர் அனுமதிக்கப் பட்டிருந்தது.

இந்த நடைமுறையினால் முதன் முதலாக ஹஜ் பயணம் செல்ல விரும்பும் மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் இருந்தது. இதனை கருத்தில் கொண்ட இந்திய ஹஜ் கமிட்டி புதிய நடைமுறையை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இது தொடர்பாக, முசாபர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஷாகிர் ஹுசைன் கூறியதாவது:-

இரண்டாவது முறையாக ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு இனி அரசின் மானிய உதவி கிடைக்காது. இதுவரை ஹஜ் யாத்திரை செல்லாத இஸ்லாமியர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் மானியத்துடன் ஹஜ் செய்ய விரும்புவோர், ‘நான் முதன் முறையாக இப்போது தான் ஹஜ் யாத்திரை செல்லப் போகிறேன்’ என்று உறுதிமொழி பத்திரத்தை மானியம் கோருவதற்கான விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தவறான தகவல்களை அளித்து அரசின் மானியத்தை பெற முயல்பவர்களின் அரசின் மானியத்தை பெற முயல்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

THANKS : MAALAIMALAR

Tuesday, January 08, 2013

”ஒழுங்கான ஆடை அணியாதது தான் கற்பழிப்புக்கு முக்கிய காரணம்” காப் பஞ்சாயத்

ஹிசார் கிராமத்தில் இளம் பெண்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய கப் பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

ஹரியானா மாநிலம் ஹிசார் கிராமத்தில் பெண்கள் செல்போன் பயன்படுத்த கப் பஞ்சாயத்து தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இளம்பெண்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிய தற்போது பஞ்சாயத்தார்கள் தடை விதித்துள்ளனர்.

கேதர் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை பஞ்சாயத்து தலைவர் ஷம்ஷேர் சிங் செய்தியாளர்ளிடம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட சாந்தி தேவி என்ற நடுத்தர வயது பெண் கூறுகையில், பஞ்சாயத்து நல்ல முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். ஒழுங்காக ஆடை அணியாதது தான் கற்பழிப்புக்கு முக்கிய காரணம் ஆகும் என்றார்.

ஹிசார் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் மகாவீர் சிங் கூறுகையில், பஞ்சாயத்து முடிவை வரவேற்கிறோம். யாராவது டிஜே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தால் அவர்களுக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.

இஸ்லாமிய சட்டம் தான் மனித குலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு என்பதை உலகம் இன்று உணர்ந்து வருகின்றது… அல்ஹம்துலில்லாஹ்!

இறைவன் திருமறையில்..

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக!அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 33:59)

THANKS:TNTJ.NET

Thursday, October 11, 2012

ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் மூன்றாண்டு சிறை

புதுடில்லி: மொபைல் போனில், ஆபாச படங்களை அனுப்புவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்து, எஸ்.எம்.எஸ்., மற்றும் மெயில் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பெண்களை இழிவுபடுத்தியும், ஆபாசமாக சித்தரித்தும், அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக, தண்டனை வழங்கும் வகையில், 1986ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, நவீன தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு, பல்வேறு விதமான தகவல் தொடர்பு சாதனங்கள் வந்துள்ளன. மொபைல் போன், இணையதளம் ஆகியவற்றின் மூலம், தெரிந்தோ, தெரியாமலோ தகவல்களை எளிதில் பெற முடிகிறது. இதை சிலர், தவறாகப் பயன்படுத்தி, மொபைல் போனில் ஆபாச படங்களை, எம்.எம்.எஸ்., மூலம் அனுப்புவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், இழிவுபடுத்தியும், எஸ்.எம்.எஸ்., அனுப்புவது அதிகரித்துள்ளது. பெண்களை ஆபாசமாக படமெடுத்து, இணையதளத்தில் பரவ விடுவது போன்ற செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதில், பெரும்பாலும், கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், ஆபத்தை உணராமல் சிக்கிக் கொள்கின்றனர். "இது போன்ற, குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்' என, பார்லிமென்டிலும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று, பிரதமர் தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சட்ட திருத்தம் கொண்டு வர, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, பெண்களை இழிவுபடுத்தி, சித்தரித்து மோசமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வகை செய்யும், ஐ.ஆர்.டபிள்யூ.ஏ., சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. மின்னணு தொடர்பு சாதனங்களான, மொபைல் போன் மற்றும் இணையதளம் வழியாக, பெண்களை ஆபாசமாக சித்தரித்து படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சம், மூன்றாண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த குற்றத்தை, முதல் முறையாக செய்து மாட்டிக் கொள்பவருக்கு, தற்போது, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது, 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அதிகபட்சம், 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒரு முறை தண்டனை அனுபவித்து, இரண்டாவது முறையாக, இதே குற்றச் செயல்களில் ஈடுபட்டால், ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேபோல், 1 லட்சம் அபராதம், 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரிகள், சந்தேகப்படுவோரின் வீடுகளைச் சோதனையிடவும், பறிமுதலும் செய்யலாம். இது மட்டுமின்றி, விளம்பரம், ஓவியம், எழுத்து என, எந்த வடிவிலும் பெண்களை இழிவுபடுத்தி, படங்களோ, வாசகங்களோ அமைந்தால், அதை தடுக்கும் வகையில், இந்த சட்ட திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம், வரவிருக்கும் பார்லிமென்டின் குளிர்காலத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இப்படியொரு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என, பல உறுப்பினர்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளதால், இது கட்சி பேதமின்றி நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை சட்ட வடிவமாக்குவதற்கு முன், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Tuesday, October 09, 2012

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மதி மழுங்கச் செய்து அடிமைகாளாக்கி வரும் Facebook & Twitter! – சிக்காக்கோ யுனிவர்சிட்டி ஆய்வு முடிவு

சமீபத்தி்ல சிக்காக்கோவில் உள்ள Chicago Booth School of Business classified என்ற பல்கலைகழகம் ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 18 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
தற்போதைய சமுதாயத்தினர் எதில் அதிகம் மோகம் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகிள்ளது.
தங்களின் பார்ட்னரிடம் செல்வதை விட Facebook & Twitter இடம் செல்வதை தான் தற்போதை சமுதாயத்தினர் அதிகம் விரும்புகின்றனர். அதில் தான் அதிக மோகம் கொண்டுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர முடிவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் மற்றும் சிகிரெட்டில் கிடைக்கும் இன்பத்தை விட Facebook மற்றும் Twitter ல் இன்றைய சமுதாயத்திற்கு அதிக இன்பம் கிடைக்கின்றதாகவும் அது எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் எங்கு வேண்டுமானாலும் எப்பொழு வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் அதில் தான் அவர்கள் அதிகம் மோகம் கொள்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது…
இன்றைய இளைய சமூதாயம் Facebook மற்றும் Twitter ல் மூழ்கி கிடக்கும் காரணத்தை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளது சிக்காக்கோ பல்கலைகழகம்.
இப்படி மோகம் கொள்ள காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
அனைவருக்கும் புரியும் விதத்தில் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் இரண்டு இணையதளங்களும் ”மாமா”  வேலையை தான் பார்க்கின்றனர். அதை தொழில் நுட்ப ரீதியாக செய்கின்றனர். இவைகளை eMaMa என அழைத்தால் அது மிகையாகாது.
பஸ்டாண்டு பஸ்டாண்டா அழைந்து, தெரு தெருவா சுத்தி, பல மணி நேரம் வெயிட் பன்னி, பொண்ணு பையன தேட்ரதும் பையன் போன்ன தேட்ரதும் அந்த காலம் ன்னு சொல்லுவாங்க. ஆனா இப்ப உக்காந்த இடத்துல இருந்துக்கிட்டே பொண்ணு தான் விரும்பிய பையன் கிட்ட கடல போடவும் பையன் தான் விரும்பிய போண்ணு கிட்ட கடல போடவும் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் தான் இந்த  Facebook மற்றும் Twitter.
”ஒருத்தன், ஒருத்தி” என்பதெல்லாம் போய் ஒரே நேரத்துல ஒரு பையன் பல பொண்ணுங்க கிட்டயும் ஒரு பொண்ணு பல பையங்க கிட்டயும் Facebook மற்றும் Twitter ல் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். அதனால் தான் செக்ஸ் சிகிரட்டை விட அதிக மொகம் இதில் வருகின்றது.
இதில் நடக்கும் பல கூத்துக்கள் செய்திகள் படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தன்னோட தங்கச்சி கிட்டயே Facebook மற்றும் Twitter ல் கடல போட்ட அண்ணங்க நிரைய பேரு இருங்காங்க.
வேறு யாரோன்னு நினைச்சு தன்னோட மனைவி கிட்டயே கடல போட்டு மாட்டிக்கிட்ட புருசன் எத்தனை பேரு..
போண்டாட்டி புருசன் கிட்ட மாட்டிக்கிட்ட கதை..
அம்மா மகன், அப்பா போன்னு இப்படி எழுவதற்கே கை கூசும் அளவிற்கு இதில் அசிங்கள் அறங்கேரிக் கொண்டிருக்கின்றது..
ஏதாவது ஒரு பெயர் மற்றும் படத்தை போட்டு கணக்கை துவங்கி விடுகின்றனர்.  பிறகு கண்ணுல பட்ரவங்கிட்டயெல்லாம் கடல போட்ரது.. அதான் EMaMa க்கள் (facebook & twitter) இருக்காங்களே அங்க இங்க இருக்கவங்களோட போட்டோ பேயரயெல்லாம் வழிய வந்து காட்ரதுக்கு.. தேவையானத செலக்ட் பன்னிக்க வேண்டியது தான்!
இதில் ஏமாந்து தங்களது கற்பை, பணத்தை இழந்தவர்களின் பட்டியல் ஏராளாம் உள்ளது.
பெற்றோர்களுக்கு..
வெளிநாட்டில் இருக்கும் பெற்றவர்கள் நம்ம புல்ல நல்லா படிக்கட்டும் ன்னு கம்யுட்டர், செல்போனு, இன்டர்நெட்டுன்னு வாங்கி கொடுத்து விடுங்கின்றனர். பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என கண்கானிப்பது இல்லை வீட்டில் உள்ள பெண்களுக்கு விபரம் தெரியாது. பிள்ளைகள் , பெற்றவர்கள் வாங்கிக் கொடுத்ததை நல்லவற்றிற்கு பயன்படுத்தாமல் இது போன்று சீரழிந்து போய் விடுகின்றனர்..
பிள்ளைகளுக்கு செல்போன்களை வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.  ஏன் எனில் தற்போதைய பெரும்பாலான போன்களில் இந்த இரண்டு eMaMa க்களும் இலவச இணைப்பாக வருகின்றனர்.
கணிணையை பொறுத்தரை அறிவை வளர்ந்து கொள்வதற்கு அது இன்றைக்கு மிகவும் அவசியமானது. எனினும் பிள்ளைகள் அதை இது போன்று தவறான விசயங்களுக்கு பயன்படுத்த விடாமல் தடுக்க ஏராளமான Parent control மென்பொருள்கள் உள்ளது.
உதாணரத்திற்கு ஒன்றை குறிப்பிடுகின்றோம்:
இதை கணிணியில் நிறுவி வி்ட்டால் இது போன்று சோசியல் நெட்வொர்க் இணையதளம் மட்டுமல்லாமல் மற்ற தேவையில்லாத எல்லா இணையதளத்தையும் இது  தானாக ப்ளாக் செய்து விடும். அது போன்ற இணையதங்களை கணிணியில் பிள்ளைகளால் பார்க்க முடியாது.
Facebook மற்றும் Twitter போன்ற இணையதளங்கள் நல்லதிற்கு ஆரம்பிக்கப்பட்டதோ கேட்டதற்கு ஆரம்பிக்கப்பட்டதோ எதுவாக இருந்தாலும், கேட்டவைகளுக்கு தான் தனது சேவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என தெரியவந்தும் அதை தடுக்க அல்லது நிறுத்த முயற்சி எடுப்பது தான் சமுதாய நலம் கொண்ட நிறுவனங்களின் கடமை.
ஆனால் சமுதாய நலனை மறந்து விட்டு பணம் சம்பாதிப்பதற்காக சமுதாய சீர்கேடுகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் தினந்தோறும் பல்வேறு வசதிகளை வழங்கி  இளைய சமுதாயத்தை தன் பக்கம் அடிமையாக்கி வைத்துள்ளது இந்த இணையதளங்கள்.
விழித்துக் கொண்டவர் பிழைத்து கொண்டார்!
பேஸ்புக்கில் 83 மில்லியன் போலி கணக்குகள் இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பேஸ்புக்கே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.