இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, October 19, 2011

அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.

வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும்.

பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.

உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும்.

மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

கரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சின்னம்மை எளிதில் பரவும்  என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை.

வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது.
அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.

பாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.

மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.

அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம்.இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம்.

தடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

நன்றி: தமிழ் சிஎன்என்

Saturday, October 15, 2011

உள்ளாட்சிக்கான தேர்தலா ?ஊழலாட்சிக்கான தேர்தலா ?முடிவு உங்கள் கையில்.

சாதாரணமான மக்களும் வியக்கும் வண்ணம் இப்போதுள்ள உள்ளாட்சி தேர்தல்கள்  மாறி வருகின்றது.ஏனென்றால் அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்ப்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளன.

ஒரு நேரத்தில் உள்ளாட்சி  தேர்தலில் ஊரில் உள்ள மக்களில் சற்று பிரபலமானவர் போட்டி இடுவார் ஆனால் இன்றோ பெரிய பெரிய அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றது.அதற்க்கு காரணம் உள்ளாட்சிகளில் நிறைவேற்ற படும்  திட்டங்களுக்கு நிதிகளின் தொகை அதிகமாக ஒதுக்கபடுவதே காரணம்.பஞ்சாயத் ராஜ் திட்டம் மூலம் கோடிகணக்கான பணம் மதிய அரசால் ஒதுக்கபடுகின்றன.அதற்கு என்ன அது தெரிந்ததுதானே என்று சிலர் நினைக்கலாம். தெரியாத விசயங்கள் உள்ளது ஊரில் நிறைவேற்றப்படும் திட்டங்களை செயல்படுத்தும் காண்ட்ராக்டர்கள் மூலம் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிசனாக(லஞ்சமாக) 4 சதவிகிதம் அதிகமாக வழங்கபடுகிறது. அட போங்க சார் இது நம்ம இந்தியால என்ன பெரிய  விசயமா ?என்று கேக்கலாம் தேசிய அளவில் நடக்கும் ஊழல்கள்  நம்மை எந்த அளவில் பாதிகின்றன என்பதை நாம் இன்னும் உணராமல் இல்லை (விலைவாசி உயர்வு,பெட்ரோல்,கேஸ்,போன்றவைகளின்விலை உயர்வு)நேரடியாகவே பாதிகின்றன.உள்ளாட்சிகளில் நடக்கும் ஊழல்கள் நமது ஊரில் நடக்கும் திட்டங்களில் தரமின்மையாலும்,பஞ்சாயத்துகளில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளினாலும் பாமரனும் பாதிக்கபடுகிறான்.

கிராம நிர்வாக அலுவலரில் இருந்து தாசில்தார் வரை லஞ்சம் அளித்தால்தான் நமக்கு தேவையான ஆவணங்களை  பெற முடியும்.இப்படி லஞ்சம் புரையோடி உள்ள நாட்டில் யாரு என்னதான் செய்ய முடியும் என்று நினைத்து நாமும் பழகி விட்டோம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக ஒரு ஊழலற்ற MLA வையோ MP யைய்யோ  நம்மால் தேர்ந்தெடுக்க  முடியாது என்பது நிதர்சனம்.ஆனால் கண்டிப்பாக ஒரு வார்டு கவுன்சிலரை,பஞ்சாயத் தலைவரை,நகராட்சி தலைவரை, உள்ளாட்சி தேர்தலில் போட்டி இடும் கிராம புற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியும் இதில் கண்டிப்பாக அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற நிர்வாகத்தை தரமாட்டார்கள் அப்படியே அவர்கள் நல்லவர்களாக  இருந்தாலும் அவர்கள் சார்ந்துள்ள கட்சியினர் அவர்களை நல்லவர்களாக் இருக்கவிடுவதில்லை.அதனால் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டி இடுபவர்களிலும்  அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை முறையை பார்த்து தேர்ந்தெடுப்பதே நல்லது

யார் ஒருவர் பதவி ஆசை இல்லாமல் பொது சேவைகளை பெருமைக்கு செய்யாமல்,தானா தர்மங்களை பிறர் காண செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களை போன்றவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகவே தங்களுடைய குடும்பத்தினரின்  பொன்னான வாக்குகளை மேற்கண்டவிசயங்களை சிந்தித்து இந்த  செய்தியை படிக்கும் நண்பர்கள்  தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என நமது  ஊரின்,மாவட்டத்தின், நாட்டின்  நலன் கருதி ஒரு ஊழலற்ற பஞ்சாயத்து,நகராட்சி,மாநகராட்சி  ( தலைவரை) வார்டு உறுப்பினர்களை,கவுன்சிலர்களை ,மேயர்களை தேர்ந்தெடுக்க  வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன்.
 
THANKS : முகைதீன்

Friday, September 16, 2011

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாசிச வெரி பிடித்த பிஜேபி யுடன் கூட்டணி?

வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து,  அகமதாபாத்தில் 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகும் குஜராத் முதல்வர்  மாமிசம் தின்னும் மிருகம் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இதில் வருத்தப்படவோ வேதனை படவோ அவசியம் இல்லை இது எல்லோராலும் எதிர்பாக்க பட்ட ஒன்றுதான், பதினைந்து வருடத்திற்கு முன்பு ஒன்றினைந்த தா மு மு க மாநாட்டில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்தது தவறு என்று கூறி அடுத்த தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைத்ததை யாரும் மறந்து விட முடியாது.
 
அதிமுக சார்பில் இந்த உண்ணாவிரதத்தில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர்.

அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த உண்ணாவிரதத்தை அறிவித்தார் மோடி.

நாளை முதல் இந்த உண்ணாவிரதம் தொடங்கவுள்ளது. இந் நிலையில் இந்த உண்ணாவிரதத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்து ஜெயலலிதாவின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Thursday, September 15, 2011

இந்த வருடம் தமிழகத்திலிருந்து புனித ஹஜ் பயணம் செல்வோர் கவனத்திற்கு...

இந்தியாவில் உள்ள தனியார் ஹஜ் சர்விஸ்களுக்கு மத்திய அரசின் ஒதிக்கீடு வெளியிடப்பட்டுள்ளது மொத்தம் 45,491 அதில் தமிழகத்திற்கு 3,769 அதன் விபரத்தை பார்பதற்க்கு முன்..... 
சென்ற வருடம் 2010 ம் ஆண்டு நூற்றுக்கணக்கான ஹஜ் பயனாளிகள் சில தனியார் ஹஜ் நிறுவன புரோக்கர்களால் விமான நிலையம் வரை வர வைத்து விட்டு அவர்களது புனித ஹஜ் பயண கனவுகளை சிதைத்து சின்னபின்னம்மாக்கியது தங்கள் அனைவரும் அறிந்ததே. ஆகவே இந்த வருடம் அதுபோல் நடக்க கூடாது என்ற காரணத்தினால் மத்திய அரசு மிகவும் கவனமாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்பொழுது எந்தெந்த முகவர்களுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு என்பதை தெளிவாக வெளி இடப்பட்டுள்ளது. ஆகவே புனித ஹஜ் செல்வோர் கவனமாக தங்கள் முன் பணம் கொடுத்துள்ள முகவர்களிடம் தங்களது பயண சம்பந்தமான விசா, டிக்கெட் மற்றும் அணைத்து விபரங்களையும் கேட்டு தங்களது ஹஜ் பயணத்தை உறுதி படித்திகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
உங்களது ஹஜ் பயணம் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக அமீன்.
மேலும் விபரங்களுக்கு http://www.hajcommittee.com/...

Tuesday, August 30, 2011

கோ-ஆப் டெக்ஸ்சின் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் அதிரடி

அரசு அலுவலகங்களிலும், அரசு அலுவலக வளாகத்திலும் கடவுள் படங்கள் மற்றும் கோவில்கள், சாமி சிலைகள் வைக்க கூடாது என்றும், அப்படி முன்னரே வைக்கப்பட்டிருந்தால் அவற்றை விரைவாக அப்புறப்படுத்தும் படி 1968-ம் ஆண்டிலேயே (நினைவு குறிப்பு என்-7553/66-2) தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், நம் ஊர் அதிகாரிகள் அரசு உத்தரவை மதிக்காமல் நடப்பபதில் முதலிடம் வகிப்பவர்கள். அதனால், எந்த அலுவலகத்திலும் இருக்கும் சாமி படங்களை எடுப்பதுமில்லை.


உயர் அதிகாரிகள் கூட சாமி படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க கூடாது என்று சொல்லுவதுமில்லை.

காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் காவல் நிலைய வளாகத்திலும், காவல் நிலையங்களுக்கு உள்ளும் கோவிலே கட்டியுள்ளார்கள்.

 
ஆனால், கோ-ஆப் டெக்ஸ்சின் நிர்வாக இயக்குனரான உமாசங்கர் கடந்த 24, 25  ஆகிய தேதிகளில் சேலம் கோ-ஆப் டெக்ஸ் அலுவலகத்துக்கு ஆய்வுக்கு வந்தபோது, கடைவீதியில் உள்ள பட்டு விற்பனை நிலையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை அடி உயரமுள்ள பிளையார் சிலையையும், காசாளர் அமரும் நாற்காலிக்கு மேலே இருந்த லட்சுமி, சரஸ்வதி, வெங்கடாசலபதி, பிள்ளையார், முருகன் உள்ளிட்ட சாமி படங்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

ஐயா, இது திருமண பட்டுசேலை வாங்க வரும் போது பொதுமக்கள்  பிள்ளையாரை பார்த்துட்டு வாங்குவது “செண்டிமெண்ட்” என்று சொல்லியுள்ளார்கள் அதிகாரிகள்.

“அரசு” உத்தரவை மட்டும் கடைபிடியுங்கள் எந்த செண்டிமேடுக்கும் இடமில்லை என்று சொல்லிவிட்டார் உமாசங்கர்.

கோ-ஆப் டெக்ஸ்சின் வரவேற்ப்பு வாயிலில் இருந்த பிள்ளையார், இப்போது சரக்கு இருப்பு “கிடங்கிற்கு” போய்விட்டார்.

THANKS : NAKKEERAN

Sunday, August 28, 2011

நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்!

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள்.
அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள், "இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா..." என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், "அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்" என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது.
அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், "அந்தச் சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும்" என்றார்கள்.
அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.