இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, December 27, 2010

14 வயதில் எம்.சி.ஏ படிப்பு – முஸ்லிம் மாணவன் சாதனை!

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முஹம்மது சுஹைல் என்ற 14 வயது முஸ்லிம் சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார்.

9 ஆம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பழ்கலைக்கழம்  இவருக்காக வயது வரம்பை  தளர்த்தியுள்ளது குறிப்பிடதக்கது.

ஒரு ஆண்டு காலத்திலேயே படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக முஹம்மது சுஹைல் தெரிவித்துள்ளார்.  அல்ஹம்துலில்லாஹ்!

இதன் வீடியோ
இணையதளத்தில் காணவும்.

Tuesday, December 21, 2010

உலக கோப்பை கிரிக்கெட் 30 பேர் கொண்ட உத்தேச அணி

30 பேர் கொண்ட பட்டியல் விபரம் வருமாறு:

எம்.எஸ்.தோனி, வீரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர், கவுதம் காம்பீர், வீராட் ஹோக்லி, யுவராஜ் சிங், சுரேஸ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், ஆஸிஸ் நெக்ரா, ஸ்ரீசாந்த், முனாப் பட்டேல், இஷாந்த் சர்மா, வினய் குமார், எம்.விஜய், ரோகிந்த் சர்மா, ரவீந்தர ஜடேஜா, அஜின்கையா ரகானே, சௌரப் திவாரி, யூசப் பதான், பார்தீவ் பட்டேல், ஆர்.அஸ்வின், விரித்திமான் சகா, தினேஷ் கார்த்திக், ஷிகார் தாவான், அமித் மிஸ்ரா, பியூஸ் சாவ்லா, செட்டீஸ்வர் புஜரா, ப்ராக்யான் ஓஜா, ப்ரவீன் குமார்.


இந்த 30 பேர் கொண்ட அணியில் இருந்து இறுதியாக 15 வீரர்கள் வரும் ஜனவரி 19ம் தேதி தேர்வு செய்ய படுவார்கள்.

போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி நமது முந்தய பதிப்பில்  பார்க்கவும்.

சுயபரிசோதனை!

மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது!
 எனவே அடிக்கடி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால நம் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்து நம் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கடந்த காலம் குறித்த பின்னோக்கும் தன்மையும், எதிர்காலம் குறித்த திட்டமிடலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை.
 எல்லாவற்றிற்கும் மேலாக மறுமைக்காணதோர் பயணம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணம் ஒரு சுவனப் பசுஞ்சோலையை நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம், அல்லது பாதாள படுகுழியின் பாசறையான நரகம் நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம் அல்லவா? நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அன்பு நெஞ்சங்களே! மறுமையின் நந்தவனத்தில் ‘நாமும் ஒரு மலராக’ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
இதோ கீழ்காணும் எண்ண அலைகளை அமைதிப்படுத்த முயற்சிப்போமாக! எம்மைப் படைத்த வல்ல ரஹ்மானின் ஆதரவு என்றும் நம்மோடு இருக்கின்றது.

1.  தீமை தரும் பேச்சுக்களை விட்டும் என் நாவை எந்தளவு பாதுகாத்துக் கொள்கிறேன்? அல்லது வெட்டிப் பேச்சும், வீண் வம்பும் தான் என் கைதேர்ந்த கலையா?

 2. என்றாவது மையவாடியைத் தரிசித்து, நமக்கும் மரணம் வருமே! நாமும் இங்கு தானே கொண்டு வரப்படுவோம்! என்கின்ற எண்ணம் எப்போதாவது வந்துள்ளதா? அல்லது உலகம் மரணத்தையும் மறுமையையும் மறக்கடித்து விட்டதா?
 3. கப்ர் வாழ்க்கைக்கான கட்டுச் சாதனத்தை தயார் செய்து விட்டேனா? அல்லது கப்ர் வாழ்க்கையே இப்போது தான் நினைவுக்கு வருகின்றதா?
 4. பிறர் குறைகளைப் பாராது என் குறைகளை சீர் செய்வதில் எந்த அளவு ஆர்வம் காட்டியிருக்கிறேன்? அல்லது பிறர் குறைமேய்வது தான் என் தொழிலா?
 5. இறையச்சமுடையவனாகுவதற்கு எந்த அளவு முயற்ச்சித்திருக்கிறேன்? அல்லது என் மனது கல்லாகி விட்டதா?
 6. காலத்தை வீணடிக்காது அமானிதத்தைப் பாதுகாத்திருக்கிறேனா? அல்லது காலம் கூட அமானிதம் என்பது எனக்குத் தெரியாதா?
 7.அல்-குர்ஆனில் எத்தனை சூராக்களைப் பாடமாக்கியிருக்கிறேன்? எத்தனை ஹதீஸ்களை மனனமிட்டிருக்கிறேன்? இல்லை இல்லை பாட்டும் படமும் தான் என் சிந்தனையின் விருந்தா?நான் மற்றவர்களை சந்திக்கும் போதெல்லாம் சலாம் கூறுகின்றேனா? அல்லது சலாம் கூறுவது கூட எனக்கு கசப்பாக இருக்கிறதா?
 8. புன்சிரிப்போடும், நல்ல வார்த்தைகளோடும் மற்றவர்களைச் சந்திக்கிறேனா? அல்லது கர்வம் தான் என் நடைமுறைகளின் அலங்காரமா?
 9. என் எல்லாக்காரியங்களிலும் வலதை முற்படுத்துகின்றேனா?
10. மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, முஅத்தின் பாங்கு கூறும் போது நானும் அதே போன்று கூறுகின்றோனா? அல்லது வீணாக பேசிக் கொண்டிருக்கிறேனா?
 11. எந்த அளவு என் நாவை பேணுகிறேன்? குறிப்பாக புறம் பேசாமலிருக்கிறேனா?
 12. தீமையான விஷயங்களைக் கேட்பதை விட்டும் என் காதுகளையும், தீயவைகளைப் பார்ப்பதை விட்டும் என் கண்களையும் காத்துக்கொள்கிறேனா?
 13. நான் முஸ்லிமாக இருப்பதையொட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்தேனா? அல்லது நான் ஒரு நன்றி கெட்டவனா?
 14. எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்றேனா? அவனிடமே உதவியும் தேடுகின்றேனா?
 15. பிற முஸ்லிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எப்போதாவது தனிமையில் பிரார்த்தனை செய்துள்ளேனா?
 16. பெருமையடிக்காமல் அல்லாஹ்வுக்கென்று என்னைத் தாழ்த்திக் கொண்டேனா?
 17. அல்லாஹ்வின் படைப்பினங்களைக் கூர்ந்து கவனித்து படிப்பினை பெற்றுள்ளேனா?
 18. எனக்கேற்படும் சோதனைகளிலிருந்து விடுபட அல்லாஹ்விடத்தில் முறையிட்டு கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேனா?
 19. எல்லா நேரத் தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுகின்றேனா? எத்தனை முறை முன்வரிசையில் நிற்பதற்கு கவணம் செலுத்தியிருக்கிறேன்?
 20. அல்-குர்ஆனை நிதானமாக எத்தனை முறை ஓதியிருக்கிறேன்? அதன் மொழி பெயர்ப்பை படித்து விளங்க முயற்சி செய்தேனா?
 21. சுன்னத்தான தொழுகைகளைத் தொழுகின்றேனா? குறிப்பாக முன்பின் சுன்னத்துகள், வித்ர், ளுஹா போன்ற தொழுகைகளோடு எந்தளவு என் தொடர்பு இருக்கின்றது?
 22. காலை-மாலை திக்ர்களைப் பேணி ஓதுகின்றேனா?
 23. எல்லா அமல்களையும் இஹ்லாஸோடு செய்கின்றேனா? அல்லது உலக இலாபம் தான் என் நோக்கமா?
 24. நயவஞ்சகத்திலிருந்து பாதுகாப்பு பெறும் பொருட்டு நான் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றேனா?
 25. என் பெற்றோர்களோடு நல்ல முறையில் நடக்கின்றேனா? உறவினர்களோடு சேர்ந்து வாழ்கின்றேனா?
 26. ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்கின்றேனா?
 27. எவனாவது நோய் வாய்பட்டிருக்கும் நிலையில் நோய் விசாரிக்கச் சென்று நோய் நிவாரணத்திற்காக அந்நோயாளிக்கு பிரார்த்தனை செய்தேனா?
 28. முஸ்லிம்கள் தாக்கப்படுகின்ற போதெல்லாம் அவர்களின் விடுதலைக்காக ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருக்கிறேனா?
 29. ஒவ்வொரு நாளும் தூங்கும் முன் என்னை நானே சுய பரிசோதனை செய்கின்றேனா?
சகோதர சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்!

இக்கேள்விகளை அடிக்கடி உங்கள் மனதில் ஓட விடுங்கள்! ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண முழு முயற்சி எடுங்கள்!
நன்றி : முஹம்மத்.

Monday, December 20, 2010

ஓர் அதிர்ச்சி தகவல்...

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக தேசிய குற்றங்கள் பதிவு துறை புதிய பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் 2009-ம் ஆண்டில் நாடு முழுவதும் 21 ஆயிரத்து 397 பெண்கள் கற்பழிக்கப்பட்டிருப்பதாக கூறப் பட்டுள்ளது.

நாட்டிலேயே மத்திய பிரதேச மாநிலத்தில் தான் அதிக கற்பழிப்பு நடக்கிறது. அங்கு கடந்த ஆண்டில் 2937 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 13.7 சதவீத குற்றங்கள் அங்குதான் நடக்கின்றன.

2- வது இடத்தை மேற்கு வங்காளம் பிடித்துள்ளது. அங்கு 2,263 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் 3- வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 1,871 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

மராட்டியத்தில் 1558 பேரும், ராஜஸ்தானில் 1,355 பேரும், பீகாரில் 1,302 பேரும் கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளனர். நாட்டிலேயே நாகலாந்து மாநிலத்தில்தான் கற்பழிப்பு குறைவாக உள்ளது. அங்கு 19 பேர் மட்டுமே இதில் சிக்கியுள்ளனர்.

கற்பழிக்கப்படும் பெண்களில் 57.2 சதவீதம் பேர் 18 வயதில் இருந்து 38 வயதுக்கு உட்பட்டவர்கள். 91 சதவீத கற்பழிப்பு சம்பவங்கள் பெண்களுக்கு அறிமுகம் ஆன வர்களாலேயே நடக்கிறது.

33.1 சதவீத பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களால் கற்பழிக்கப்படுகின்றனர்.

நன்றி : மாலைமலர்

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக!அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி) நூல்: புகாரீ 6016


“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 73

Sunday, December 19, 2010

ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகிறது

புதுடெல்லி: கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்க ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகிறது. கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக திகழ்கிறது. கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்படுவது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.  கடந்த 2006ம் ஆண்டில் 8.39 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது 2008ம் ஆண்டில் 23 கோடியாக அதிகரித்தது. இந்த ஆண்டில்  கடந்த அக்டோபர் மாதம் வரையில் 21 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 10 லட்சம்  நோட்டுகளில் 8 நோட்டுகள் கள்ளநோட்டுகளாக இருக்கலாம் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. இந்தியாவில் 1,800 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 50  சதவீதம் அதிக மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகள் (ஸி100, ஸி500, 1000).

கள்ளநோட்டுகள் புழக்கத்தை ஒழிக்க,ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கண்ணுக்கு புலப்படாத காந்த ஈர்ப்பு கொண்ட பாதுகாப்பு நூல்,இயந்திரத்தின் உதவியால் படிக்கும் அளவிற்கு ‘மைக்ரோ’ எழுத்துக்கள், எந்த மாறுபட்ட கோணங்களில் பார்க்கும்
  போது மாறுபடும் கலர், காந்த ஈர்ப்பு கொண்ட மெல்லிய உலோக தகடு ஆகியவை கூடுதல் சிறப்பு அம்சங்களாக கொண்டு வரப்படுகின்றன.

மத்திய அரசின் முன்னாள் செயலாளர் ஷீலாபத்ரா பானர்ஜி தலைமையிலான நிபுணர்கள் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, ரூபாய் நோட்டுகளுக்கான இயக்குனரகம் ஒன் றை மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது. ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல், ஆய்வு, மேம்பாடு மற்றும் ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை பற்றி
 கண்காணிக்கவும் நிதியமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து இந்த இயக்குனரகம் செயல்படும்.

நன்றி : தமிழ் CNN

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது 20% ஆக குறைந்தது!

சென்னையில் தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு மணி நேரத்தில், தாய்ப்பால் தர வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் உணர வேண்டும் என, யுனிசெப் அமைப்பின் உணவியல் நிபுணர் மீனாட்சி மெஹார் பேசினார்.

இது குறித்து மீனாட்சி மெஹார் பேசியபோது தாய்ப்பாலில் 70 சதவீதம் நீர் உள்ளதால், பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறு, கிருமிதொற்று உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம். கடந்த ஆண்டின் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கைபடி, தமிழகத்தில் முதல் ஆறு மாதம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் தருவோர் எண்ணிக்கை, 2006ம் ஆண்டை ஒப்பிடும்போது, 39 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு 1.5 வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவற்றின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில், குழந்தைகளுக்கு தரப்படும் தாய்ப்பாலில், "கொலோஸ்ட்ரம்' எனும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய வேதிப்பொருள் உள்ளது. இதை தருவதால், குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணிசமான அளவு குறைக்கலாம். தற்போது 100 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதால், இவ்வழிமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்களும், செவிலியர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். என்று மீனாட்சி மெஹார் கூறினார்.

தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவர் சல்மா பேசும்போது, குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை தடுக்கவும், இயற்கை கருத்தடை முறைக்கும், தாய்ப்பால் தருவது அவசியம். மேலைநாடுகளில் இதன் அவசியம் உணரப்படும் நிலையில், நம் நாட்டில் இதன் முக்கியத்துவம் குறைந்து வருவது வருந்தத்தக்கது  என்றார்.

குர்ஆனின் சிறப்பு :
குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும். இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 2 : 233

நன்றி : INTJ

கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

 எடை!
கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணிகள் எடை 12 கிலோ வரை கூடலாம். இதில் கரு, பனிக்குடம், அதில் உள்ள திரவம் ஆகியவற்றின் எடை 4.4 கிலோ, கருப்பையும், மார்பகமும்1.1 கிலோ, ரத்த அதிகரிப்பு 1 கிலோ, கொழுப்பு சேர்வது 2 கிலோ, நீர் தேங்குவது 4 கிலோவும் ஆகும்.
உணவு முறை!
புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி சத்து அதிகம் உள்ளது. ஆனால் பாலிஷ் செய்யப்பட்ட புழுங்கல் அரிசியில் இருந்து இச்சத்து பிரிக்கப்படுவதால் சத்து கிடைக்காது. வைட்டமின் பி சத்து நீரில் கரையும் தன்மை உள்ளது. வேகவைத்து கஞ்சியை வடித்துவிடும் போது அதில் சென்று அச்சத்து வீணாகிறது. அதனால் கஞ்சித் தண்ணீர் குடிப்பது நல்லது.
விலங்கு உணவுகளில் இருந்து மட்டுமே வைட்டமின் பி12 சத்து கிடைக்கிறது. ரத்த அணுக்கள் உண்டாக வைட்டமின் பி12 தேவை. ரத்த சோகை உண்டாவதற்கு இதன் பற்றாக்குறையும் ஒரு காரணம். மீன், முட்டை, பால் இறைச்சி ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிட்டு இச்சத்தைப் பெறலாம்.
தினமும் குறைந்த கொகுப்புள்ள பால் 750 மில்லி கிராம் அருந்தினால், அன்றையத் தேவையில் சுமார் 80 விழுக்காடு கால்சியத்தைப் பூர்த்தி செய்யும். பால் சாப்பிடாதவர்கள், சிறிய வகை மீன்கள், பச்சைக் காய்கறிகள், சோயா, ஆரஞ்சு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
கருச்சிதைவு?
ஏழில் ஒரு கரு சிதைகிறது. அவற்றில் பெரும்பாலானவை ஆறு முதல் பத்து வாரங்களில் சிதைந்து போகின்றன. குறிப்பாக, 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்குப் பத்தில் ஒரு கரு வீதம் சிதையலாம். முப்பத்தைந்து வயதுக்கு மேலானால் ஐந்தில் ஒரு கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  கர்ப்பத்தின் போது ஏற்படும் எந்த ரத்தப் போக்கும் கருச்சிதைவின் தொடக்கமாக இருக்கக்கூடும். ரத்தப் போக்கு ஏற்பட்டு அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்தமுறை நலமான மகப்பேறு அடையும் வாய்ப்பு 80 விழுக்காடு இருக்கும். இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் 75 விழுக்காடும், மூன்று முறை ஏற்பட்டிருந்தால் 70 விழுக்காடு வாய்ப்பும் இருக்கும்.

உடற்பயிற்சி!

உடற்பயிற்சி செய்ய விரும்பும் கர்ப்பிணிகள், ·பிசியோதெரபி நிபுணரின் ஆலோசனை மற்றும் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. பயிற்சியின் போது கணவர் உடன் இருந்தால் இன்னும் சிறப்பாக பயிற்சி செய்யலாம்.

பிரசவ காலம்!

பிரசவ நேரத்தின் போது எதையும் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுவர். இதனால் பிரசவ நேரத்தில் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம். தவிர, இத்தகைய நிலைகளில் மயக்க மருந்து மருத்துவரின் உதவி தேவைப்படுவதால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நன்றி : வெப்துனியா