இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, July 10, 2011

அதிக எடை, குறைந்த உடல் உழைப்பு போன்றவை சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்கக் காரணங்கள்

ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்' என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றம், அதிக எடை, குறைந்த உடல் உழைப்பு போன்றவை சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்கக் காரணங்கள் என்றாலும், சிசேரியன் பிரசவங்களை தனியார் மருத்துவமனைகள் ஊக்குவிக்க, பணமும் ஒரு காரணம் என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது.கரு உருவாகி, தங்களிடம்,"செக்-அப்'புக்கு வரும்போதே அந்தப் பெண்ணின் மனநிலையை, சிசேரியன் பிரசவத்துக்கு ஏற்ப, தனியார் நிறுவனங்கள் தயார் செய்து விடுகின்றன என குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான மகப்பேறு மருத்துவர்கள் இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றனர்தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் வசுந்தரா தியாகராஜன், ""கர்ப்பிணியின் உடல் அமைப்பு, சாதாரண பிரசவத்துக்கு ஏற்றதாக இருந்தால், சிசேரியனுக்கு அவர்களைக் கட்டாயப்படுத்துவது இல்லை. இரண்டு தலைமுறைக்கு முன், சர்வ சாதாரணமாக ஏழு, எட்டு முறை கர்ப்பம் தரிப்பார்கள். இதில் ஒன்றிரண்டு குழந்தைகள் இறந்தே பிறக்கும். ஒன்றிரண்டு மிஞ்சும். ஆனால், இப்போது ஒன்று, தப்பினால் இரண்டு என்றாகிவிட்ட நிலையில் யாரும், "ரிஸ்க்' எடுக்கத் தயாராக இல்லை.

சாதாரண பிரசவத்தை விட சிசேரியன் பாதுகாப்பானது என, பலர் நம்புகின்றனர்,'' என மக்களின் மன நிலை மாற்றத்தை சுட்டிக் காட்டினார்.""சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் கூட சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டு, 20 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவங்கள் 2011ம் ஆண்டு 50 சதவீதமாக அதிகரித்துவிட்டது,'' என, தனியார் மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர்.தியாகராஜன் கூறினார்.எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் மீனலோசனி, ""தலைமை அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் அதிகரித்துள்ளதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முடியாதவை, இங்கு அனுப்பப்படுவதே காரணம்.

ஆனால், அங்கு சாதாரண பிரசவங்கள் தான் அதிகம்,'' என விளக்கம் அளித்தார். இதை கிராமப்புற செவிலியர் கற்பகமும் உறுதி செய்தார், ""ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்துக்கு 50 டெலிவரிகள் என்றால் 40 சாதாரண பிரசவம் தான்.''ஏழை மற்றும் அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த பெண்களில் பெரும்பாலோர், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக்கொள்வதால், அவர்களுக்கு சாதாரண பிரசவம் தான் நடக்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினர் டாக்டர்களின் அறிவுருத்தலின் பேரிலோ, பயம் காரணமாகவோ, சிசேரியனை எளிதில் தேர்வு செய்கின்றனர்.

மாறி வரும் வாழ்க்கை முறை சிசேரியன் பிரசவத்திற்கு ஒரு காரணம் என்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் சிறுநீரகத் துறை டாக்டர் ஸ்ரீ கலா, ""வாழ்க்கை வசதிகள் பெருக, பெருக இயல்பான பிரசவங்கள் குறைந்து, சிசேரியன் அதிகரித்து வருகிறது. இப்போது உடல் உழைப்பு குறைந்துவிட்டது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவை சில நேரங்களில் தாய்-சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். இதுவே சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணங்கள்,'' என்றார்.

வாழ்முறை ஒரு பக்கம் இருக்க, தனியார் மருத்துவமனைகளில் பணமும் முக்கி காரணமாக உள்ளது, ""சிசேரியன் அதிகரிக்க, பணம் ஒரு முக்கிய காரணம் என்பது நடுநிலை மருத்துவர்களின் கருத்து. இப்போது மருத்துவமும் வர்த்தகமாகப் பார்க்கப்படுவதால், தாங்கள் செய்துள்ள முதலீட்டுக்கு ஏற்ப பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம், தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. பணத்துக்காக சிசேரியன் என்ற குற்றச்சாட்டை உடைப்பதற்காக, இரண்டுக்கும் ஒரே விதமான கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்,'' என டாக்டரர் தியாகராஜன் கூறினார்.

தாய்- சேய் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், நார்மல் டெலிவரியே தாயுக்கும்,சேய்க்கும் நல்லது என்பதே அனைத்து டாக்டர்களின் ஒருமித்த கருத்து. எனவே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் என்று டாக்டர்கள் உறுதி கொள்ள வேண்டும். நார்மல் டெலிவரியை ஊக்கப்படுத்தும் வகையில், பெண்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நல்ல நாளில் பிறக்க...நல்ல நாளில், நல்ல நேரத்தில், நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பெற்றெடுப்பதற்காக சிலர் அறுவை சிகிச்சை செய்கின்றனர், என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு பதிலளித்த டாக்டர் ஜெயஸ்ரீ, "எங்காவது ஒன்றிரண்டு நடக்கலாம். பெரும்பாலான மருத்துவர்கள் இதற்கு உடன்படுவதில்லை' என்றார்.

THANKS : DINAMALAR.

Saturday, July 09, 2011

முதல் இடத்தை பிடித்த தொழிலாளி மகன் “அப்துல்கலாம் போல் விஞ்ஞானியாக ஆசை”

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் முதல் இடத்தை பிடித்த மாணவர் அசோக்குமார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மணிவாசகம் கூலித்தொழிலாளி. இறந்து விட்டார். தாய் முருகேஸ்வரி கூலிவேலை பார்த்து படிக்க வைக்கிறார்.
 
தமிழ் வழியில் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தார். இவரது திறமையை பார்த்து ஈரோடு தாமரை மெட்ரிக்குலேசன் பள்ளி, பிளஸ்-2வை இலவசமாக கற்றுக் கொடுத்தது.
 
பிளஸ்-2 தேர்வில் 1175 மதிப்பெண்கள் பெற்றார். இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண்கள் பெற்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றார். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததில் 2 மதிப்பெண்கள் கிடைத்தது. இதனால் கம்ப்யூட்டர் சயின்சிலும் 200 மதிப்பெண் பெற்றார்.
 
இதன் மூலம் தரவரிசையில் 37-வது இடத்தில் இருந்த அசோக்குமார் முதல் இடத்தை பிடித்தார். இன்று கவுன்சிலிங்கிற்கு அசோக்குமார் அவரது அண்ணன் சதீஷ்குமாருடன் வந்திருந்தார். முதல் இடத்தை பிடித்தது பற்றி அசோக்குமார் கூறியதாவது:-
 
நான் தமிழ் வழியில்தான் பிளஸ்-2 வரை படித்தேன். முதல் இடத்தை பிடித்தது சந்தோசமாக உள்ளது. எம்.ஐ.டி. கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துள்ளேன். அப்துல்கலாம் போல் பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.

Wednesday, July 06, 2011

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.
 
மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது.....

‘மனிதன் நாட்டத்தில் எதுவும் நடப்பதில்லை - இறைவன் நாட்டமின்றி ஓர் அணுவும் அசைவதில்லை’. இதுதான் ஆன்மீகவாதியின் நம்பிக்கையாக இருக்க முடியும், அவர் எந்த மதத்தைச்சார்ந்தவராக இருப்பினும் சரியே.
உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது, உச்சரிக்கவும் கூடாது.

‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூ லுல்லாஹி’ கலிமாவை மொழிந்து ஏறறுக்கொண்டுள்ள ஒரு முஸ்லீம் - முஃமினுடைய உதடுகள் எக் காரணத்தைக் கொண்டும் உச்சரிக்கக் கூடாத ஒரு வார்தை ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’.(நவூதுபில்லாஹ்)

மனிதனின் பரம எதிரியான, ஷைத்தான் கூட இவ்வார்த்தையை உச்சரிக்கத் தயங்குவான். ஏனெனில் அவனுக்குக்கூட தன்னுடைய வரம்பு எது என்று ஓரளவுக்காவது புரியும். ஆனால் இந்த நன்றிகெட்ட மனிதன் தன்னைப்பற்றி இறைவன் அறிவித்துக் கொடுக்காத எதையும் தெரிந்து கொள்ள ஆற்றல் இல்லாத நிலையில் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்வதோ உச்சரிப்பதோ வரம்பு மீறுதலின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

இன்று நேற்றல்ல நெடுங்காலமாக மக்களை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள்; இவ்வார்த்தையை மேடைகளில் முழங்குவதை கண்டு கொண்டுதான் வருகிறோம். சினிமாவிலும், ஊடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் கூட இவ்வார்தையை அடிக்கடி உச்சரிப்பதை அறிய முடிகின்ற போது இது எந்த அளவுக்கு இளம் தலைமுறையினரின் உள்ளத்தில் ஊடுருவி அவர்களது இறைநம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதில் பெரிய வினோதம் என்னவென்றால் இறைநம்பிக்கையற்ற நாத்திகர்களின் வாயில் இவ்வார்த்தை வருவதில்லை. ஏனெனில் அவர்கள் இறைவனே இல்லையென்று வாதிடக்கூடியவர்கள். ஆனால் இறைநம்பிக்கையுள்ள மற்ற சகோதரர்கள்கூட சர்வ சாதாரணமாக இவ்வார்த்தையை உச்சரிக்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு இறைவனின் ஆற்றலில் நம்பிக்கையில்லையா?

ஆன்மீகவாதி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பிரபலமான நடிகர்கூட சினிமாவுக்காக மட்டுமின்றி மேடையில்கூட அடிக்கடி இவ்வார்த்தையை பிரயோகம் செய்வது அவர் ஒரு பொய்யான ஆன்மீகவாதி என்பதை பறைசாற்றுகிறது என்பதை அவர் உணர வேண்டாமா? உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது.

இவ்வார்த்தையைச் சொல்வதற்கான தகுதி எந்த மனிதனுக்காவது உண்டா என்றால் இல்லை என்பதுதான் ஆணித்தரமான பதில். ஒரு அர்ப்பமான கொசுவுக்குக்கூட அசைந்து கொடுக்கக்கூடிய பலகீனமானவனாகத்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இறைவன் தனது திருமறையில் இந்த உலகைப்பற்றிக் குறிப்பிடும்போது அவனது பார்வையில் இவ்வுலகம் ஒரு கொசுவின் இறக்கைக்குக்கூட பொருமானமில்லை என்று விளிக்கின்றான். இந்நிலையில் ஏக வல்லமைப் படைத்த ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ (நவூதுபில்லாஹ்) என்று எவரேனும் சொல்வாரானால் அவர் அறிவிலியாகத்தான் இருக்க முடியுமே தவிர அறிவாளியாக அல்ல.
ஏனெனில் இதை சொல்லக்கூடியவன் அகங்கார மிக்கவனாகவும், வரம்பு மீறியவனாகவும் தான் இனங்காணப்படுவான். தன்னையே இறைவன் என்று சொல்லிக்கொண்ட ஃபிர்அவ்னுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு அதிகமில்லை.

சரி இது ஒருபுறம் இருக்கட்டும். திருக்குர்ஆனில் இறைவன் ‘இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்’ என்று சொல்வதை கடமையாக்கி வைத்திருக்கும்போது அதற்கு நேர்மாறான ஒரு வார்த்தையை விளையாட்டுக்குக்கூட சொல்வது கூடாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் கூறுவோம் இதன் பொருள் "அல்லாஹ் நாடினால்" என்பதாகும். இதைச்சொல்வது குறித்து குர்ஆனில் 18:23,24, 2:70, 12:99, 18:69, 28:27, 37:102, 48:27 ஆகிய ஏழு இடங்களில் வருகின்றன.

மக்கா குரைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டு திணற வைத்தனர். அவர்களுடைய மார்க்கத்தை போலி மார்க்கமாக சதி சூழ்ந்து யத்ரிபிலுள்ள யூத ரப்பிகளிடம் ஆலோசனை கலந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அணுகி குகைவாசிகள்பற்றி வினவினர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாது "நாளை இதற்கு பதில் கூறுகிறேன்" என்று மறுமொழி பகர்ந்தனர். இவ்வாறு அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாதன் காரணமாக இறைவனிடமிருந்து அவர்களுக்கு இரண்டு வார காலமாக வஹீ வருவது நின்று விட்டது.

வாக்களித்தபடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தநாள் பதில்கூறாததைக் கண்ட குறைஷகள் அவர்களை பொய்யெரென இழித்துரைக்கத் துவங்கினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ கண்ணீர் மல்க தம் பாவம் பொறுத்தருள மண்டாடினர். அப்பொழுது இறைவனிடமிருந்து.

"நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்பவனாக இருக்கிறேன் என்று யாதொரு வாக்குறுதியும் அளிக்க வேண்டாம் என்றும் அல்லாஹ் நாடுவதையல்லாது இன்னும் நீர் எதையேனும் மறந்தீரானால் உம் இரட்சகனை நினைவு கொள்வீராக! (18:23,24) என்றும் அருள் எச்சரிக்கை வந்தது. அத்துடன் குகைவாசிகள் பற்றிய சில விவரங்களையும் இறைவன் கூறினான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே இந்த எச்சரிக்கை என்றால் நம்முடைய கதி என்ன? சிந்திக்க வேண்டாமா? ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்துணை சிறியதாயினும், பெரிய தாயினும். அதனை அளிக்கு முன் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறினால், அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கடமைப் பட்டவராகிறார். மேலும் அல்லாஹ், அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றப் போதுமானவன்.

எனவே ஒருவர் மற்றவருக்கு வாக்குதி வழங்குமுன் "இன்ஷா அல்லாஹ்" எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும். இன்ஷா அல்லாஹ் எனக்கூறுவதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பேற் படுகிறது.

உலகில் அனைத்துச் செயலகளும், இயக்கங்களும், அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன. மனித வாழ்வின் அனைத்துப் போக்குகளும் இறைக் கட்டளைப்படியே நடந்தேறுகின்றன. எனவே இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும். இந்நிலையில் என்று விளையாட்டுக்குக்கூட ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ (நவூதுபில்லாஹ்)  சொல்வது மாபெரும் தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

‘மனிதன் நாட்டத்தில் எதுவும் நடப்பதில்லை - இறைவன் நாட்டமின்றி ஓர் அணுவும் அசைவதில்லை’. இதுதான் ஆன்மீகவாதியின் நம்பிக்கையாக இருக்க முடியும், அவர் எந்த மதத்தைச்சார்ந்தவராக இருப்பினும் சரியே.
மீண்டும் நினைவு படுத்துகிறோம்: உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது, உச்சரிக்கவும் கூடாது. சிந்திப்போம் சிர்பெறுவோம்.

THANKS : KALEELSMS.COM

Saturday, July 02, 2011

சிறுபான்மையினருக்கு கல்வி மறுக்கப்பட்டால் 3 ஆண்டு ஜெயில் - மத்திய அரசு


சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மறுக்கப்பட கூடாது என்று சச்சார் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டியின் அறிக்கையை நடைமுறை படுத்த வகை செய்யும் வரைவு மசோதா ஒன்றை, மத்திய அரசு தயாரித்து வருகிறது.

இந்த மசோதாவின் படி, சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதியை மறுப்போருக்கு 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை அளிக்க முடியும். மேலும் தவறு செய்வோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை எடுத்து வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறையச்சமுள்ள ஒழுக்கமான பெண்கள் மீதுஅவதூறு கூறுதல்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6857
ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைக் கெடுக்க நினைப்போர் அவள் மீது கற்பில்லாதவள் என்ற ஒரு பழியைப் போட்டால் போதுமானது. அன்று முதல் அவள் நிம்மதி அனைத்தும் அடியோடு அழிந்து விடும்.

இவர்கள் இவ்வாறு பேசுவது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதை உணரவில்லை போலும்!

''உங்களுக்கு (திட்டமாக அறிவில்லாத) ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித்திரிகின்றீர்களா? இன்னும் நீங்கள் இதை இலேசானதாகவும் எண்ணிவிட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ் விடத்தில் மிகப் பெரிய (பாவமான)தாக இருக்கிறது.'' (அல்குர்ஆன் 24:15)

''கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறியவர்கள் (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.'' (அல்குர்ஆன் 24:4)

அவதூறு கூறி பூமியில் குழப்பங்களை உண்டாக்கி அநியாயம் செய்யப்படுவதைத் தடை செய்வதற்காகவும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்காகவும் இறைவன் இச்சட்டத்தை மனித சமுதாயத்திற்குப் பெரும் பரிசாகக் கொடுத்துள்ளான்.

இச்சட்டம் கடுமையான சட்டமாக இருப்பதால் இதைச் சற்று விரிவாகவே நாம் காண்போம்!

திருமணமாகாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.

''விபச்சாரம் புரிந்த பெண், விபச்சாரம் புரிந்த ஆண் ஆகிய இவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் (படிப்பினை பெறுவதற்காகவும் சாட்சியாகவும்) மூஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.'' (அல்குர்ஆன் 24.2)

அவதூறு கூறுபவர்களுக்கு எண்பது கசையடி என்று இறைச்சட்டம் இருப்பதால் பொய் சாட்சி சொல்வதற்கு எவரும் துணிய மாட்டார். அப்படியே துணிந்து நான்கு பேர் பொய் சாட்சி கூறிவிட்டாலும் நிச்சயம் அவர்கள் உலகிலேயே ஒருநாள் பிடிபடுவார்கள்.

எப்படி என்றால், கெட்டவர்கள் என்றும் ஒற்றுமையாக இருக்கவே முடியாது; என்றாவது ஒருநாள் பிரச்சினை வந்து தான் தீரும். அன்று அவர்கள் பிரிந்து விடுவார்கள். அவர்கள் இவ்வாறு இந்த விஷயத்தில் பொய் சாட்சி கூறியிருந்தால் பிரிந்த பின்பு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும் போது உண்மை வெளியாகி விடும்; அன்று அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அவதூறு கூறியவர்களுடைய சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற மற்றொரு சட்டமும் 24:4 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அவதூறு கூறியவர்களுக்குத் தண்டனை கொடுத்து விட்டால், அதைக் காண்போர் மற்றவர் மீது அவதூறு கூறமாட்டார்கள். அநியாயம் எவ்விதத்திலும் ஏற்படாது.

அன்னியப் பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள், அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். தன் மனைவியின் மீது ஒருவன் களங்கத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது என்பதையும் நாம் காண வேண்டும்.

தன் மனைவி மீது அவதூறு கூறும் ஒருவன், அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. அவளுக்குத் தக்க தீர்ப்பை வழங்கி விடலாம். தன் மனைவியைத் தவறான செயலில் கண்ட ஒருவன் சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபிக்கவில்லை என்ற காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டால் அது நியாயமாகாது; அல்லது அவன் கொண்டு வரும் வழக்கைச் சாட்சிகள் இல்லை என்ற காரணத்திற்காக நிராகரித்தாலும் நியாயமில்லை. ஏனெனில் இவ்வாறு நிராகரித்து அவனைத் தன் மனைவியுடன் வாழச் செய்வதால் பல தீய விளைவுகள் உண்டாகும் சாத்தியங்கள் உள்ளன.

''எவர்கள் தங்கள் மனைவிமார்கள் மீது அவதூறு கூறி(அதை நிரூபிக்க) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமல் இருந்தால், அவன் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து ஐந்தாவது முறை (இதில்) நான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகட்டும்! என்றும் (அவன் கூற வேண்டும்)'' (அல்குர்ஆன் 24:6-7)

இவ்வாறு அவன் சத்தியம் செய்து கூறியவுடன் அவன் சொல்வது உண்மை என்று தீர்ப்பளித்து விட முடியாது. அவனுடைய மனைவியிடமும், அவ்வாறே சத்தியம் செய்யக் கட்டளையிட வேண்டும்.

''இன்னும் (அவனுடைய மனைவி) தன் மீதுள்ள தண்டனையை விலக்க அவன் கூறிய குற்றத்தை மறுத்து ''நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி ஐந்தாவது முறை அவன் உண்மையாளர்களில் உள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்)'' (அல்குர்ஆன் 24:8-9)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பாவங்கள் மட்டுமல்லாமல், எவை எல்லாம் பாவமோ அவை அனைத்தையும் விட்டு அல்லாஹ் மனிதர்களைக் காத்து நேர்வழியில் செலுத்துவானாக. அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அருள்புரிவானாக.