இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, June 03, 2013

பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டுமே... தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாணவிகள் பாலியல் பிரச்சினைக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், இனிமேல் பெண்கள் பள்ளிகள் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 இந்த கல்வியாண்டு முதலே இது அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பெண்கள் பள்ளிகளில் பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும். இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். 
 
அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த கவுன்சிலிங்கின்போதும் அமுல்படுத்தப்படும். மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், டிரான்ஸ்பர் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
THANKS : THATSTAMIL.COM