இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, August 30, 2011

கோ-ஆப் டெக்ஸ்சின் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் அதிரடி

அரசு அலுவலகங்களிலும், அரசு அலுவலக வளாகத்திலும் கடவுள் படங்கள் மற்றும் கோவில்கள், சாமி சிலைகள் வைக்க கூடாது என்றும், அப்படி முன்னரே வைக்கப்பட்டிருந்தால் அவற்றை விரைவாக அப்புறப்படுத்தும் படி 1968-ம் ஆண்டிலேயே (நினைவு குறிப்பு என்-7553/66-2) தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், நம் ஊர் அதிகாரிகள் அரசு உத்தரவை மதிக்காமல் நடப்பபதில் முதலிடம் வகிப்பவர்கள். அதனால், எந்த அலுவலகத்திலும் இருக்கும் சாமி படங்களை எடுப்பதுமில்லை.


உயர் அதிகாரிகள் கூட சாமி படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க கூடாது என்று சொல்லுவதுமில்லை.

காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் காவல் நிலைய வளாகத்திலும், காவல் நிலையங்களுக்கு உள்ளும் கோவிலே கட்டியுள்ளார்கள்.

 
ஆனால், கோ-ஆப் டெக்ஸ்சின் நிர்வாக இயக்குனரான உமாசங்கர் கடந்த 24, 25  ஆகிய தேதிகளில் சேலம் கோ-ஆப் டெக்ஸ் அலுவலகத்துக்கு ஆய்வுக்கு வந்தபோது, கடைவீதியில் உள்ள பட்டு விற்பனை நிலையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை அடி உயரமுள்ள பிளையார் சிலையையும், காசாளர் அமரும் நாற்காலிக்கு மேலே இருந்த லட்சுமி, சரஸ்வதி, வெங்கடாசலபதி, பிள்ளையார், முருகன் உள்ளிட்ட சாமி படங்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

ஐயா, இது திருமண பட்டுசேலை வாங்க வரும் போது பொதுமக்கள்  பிள்ளையாரை பார்த்துட்டு வாங்குவது “செண்டிமெண்ட்” என்று சொல்லியுள்ளார்கள் அதிகாரிகள்.

“அரசு” உத்தரவை மட்டும் கடைபிடியுங்கள் எந்த செண்டிமேடுக்கும் இடமில்லை என்று சொல்லிவிட்டார் உமாசங்கர்.

கோ-ஆப் டெக்ஸ்சின் வரவேற்ப்பு வாயிலில் இருந்த பிள்ளையார், இப்போது சரக்கு இருப்பு “கிடங்கிற்கு” போய்விட்டார்.

THANKS : NAKKEERAN

Sunday, August 28, 2011

நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்!

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள்.
அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள், "இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா..." என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், "அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்" என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது.
அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், "அந்தச் சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும்" என்றார்கள்.
அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

Friday, August 26, 2011

முஸ்லிம்களே கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள்...

vtUf;F ,iwtd; ed;ikia ehLfpwhNdh mtUf;F khHf;f mwpit ey;Ffpwhd; vd;W mz;zy; egp(]y;) mtHfs; $wpdhHfs;. (Gfhhp> K];ypk; : mwptpg;ghsH %Mtpah(uyp))
fy;tp xU kdpjid gz;ghLs;stdhfTk;> mwpTs;stdhfTk; khw;WfpwJ. tsHe;J tUk; ,e;j etPd cyfpy; fy;tpf;Fj; jhd; vj;jid vj;jid Kf;fpaj;Jtk; nfhLf;fg;gLfpwJ. fy;tp epiyaq;fNsh ehnshU tz;zKk;  nghOnjhU Nkdpaha; Mq;fhq;Nf GjpJ Gjpjha; cjpj;jthW ,Uf;fpd;wd. fw;gpf;fg;gLk; fy;tpNah kUj;Jtk;> fzpjk;> fk;g;A+l;lH> jfty; njhlHG> tzpfk;> nghUshjhuk;> ,yf;fpak;> tuyhW> ,jopay;> Clfk;> fiy> Nfl;hpq; vd;W Jiw thhpahf Nghjpf;fg;gLfpwJ.
fy;tp vd;gJ xU kdpjdpd; mff; fz;izj; jpwf;fpwJ. fz;Zf;Fj;jhd; ik> fl;il tpuYf;Fkh? vd;W gy;NtW tpopg;GzHT thrfq;fNshL fy;tpia gw;wpa Kf;fpaj;Jtj;ij ghkuDk; mwpAk;gb gpur;rhuj;ij Koq;fp te;jJ mwpnthsp ,af;fk;. Foe;ijj; njhopyhsHfis Ntiyf;F mkHj;JtJ rl;lg;gb Fw;wk; vd;Wk; Foe;ijfis gs;spf;F mDg;ghj ngw;NwhHfs; kPJ fLk; eltbf;if vLf;fg;gLk; vd;Wk; muRk; gy;NtU jpl;lq;fis jPl;bAk; tUfpwJ. ,e;jpah Rje;jpuk; ngw;w 10 Mz;Lfspy; gjpdhd;F tajile;j vy;NyhUf;Fk; fy;tpawpT jug;gLk; vd mwptpf;fg;gl;lJ. vdpDk; ,d;;W tiu mJ rhj;jpakhftpy;iy.
ek; K];ypk; rKjhaj;jpy; ngUk;ghNyhH fy;tpapd; kfj;Jtj;ij mwpahky; tisFlh ehl;L Nkhfj;jpy; %o;fpf;fplf;fpwhHfs; vd;why; mJ kpifay;y. gbg;gtHfs; $l mijj;njhluhky; ghjpapNyNa epWj;jp tpLfpd;wdH. 2001-k; Mz;L ele;j kf;fl; njhiff; fzf;nfLg;Gg;gb ,e;jpahtpy; 65.38 rjtPjk; NgHjhd; gbg;gwpT cs;stHfs;. jkpo;ehl;ilg; nghWj;jtiu 73.47 rjtPjk; NgH gbg;gwpT cs;stHfs;. ,r; #o;epiyapy; ek; rKjhaj;jpdH fy;tpf;Fj;jUk; Kf;fpaj;Jtk; vd;d vd;gij Muha;tJ mtrpakhd xd;Nw.

ngz; fy;tp
ngz; vd;gts; xU FLk;gj;jpy; kpf Kf;fpa mq;fk; tfpf;fpwhs;. Fwpg;ghf jd;Dila Fioe;ijapd; gz;;ghl;bw;Fk;> mwptpw;Fk; mbj;jsk; ,LgtNs xU ngz;zhfj;jhd; ,Uf;f KbAk;. ek; rKjhaj;jpd; Mz;fNs gbf;f Kd; tuhj epiyapy; ngz; fy;tpiag; gw;wpa rpe;jidaw;Wf; fplf;fpwhHfs;. ,];yhk; ngz;fy;tpf;F xU NghJk; jilapltpy;iy. tsHe;J tUk; vy;yhj; JiwfspYk; ehq;fs; risj;jtHfs; my;y vd;W ngz;fSk; jq;fs; jpwikfis ntspf;nfhzHe;jthNu ,Uf;fpwhHfs;. jw;Nghija fhyj;jpy; gutyhf vy;yhj; JiwfspYk; ngz;fs; Kd;Ndwp tUfpwhHfs;. vdpDk; K];ypk; rKjha ngz;fNsh ,y;tho;f;if elj;JtJ kl;Lk; jhd; ngz;fspd; gz;ghff; fUjpf;fplf;fpd;wdH. md;dpa Mz;fSk; md;dpa ngz;fSk; fyf;ff;$lhJ vd;gJjhd; ,];yhkpa rl;lk; nrhy;fpd;wJ jtpu> fw;ff;$lhJ vd;Nwh njhopy; nra;af;$lhJ vd;Nwh ,];yhk; nrhy;ytpy;iy. khwhf K/kpdhd Mz;fisAk; ngz;fisAk; fy;tp fw;f typAWj;JfpwJ ,];yhk;.
K/kpdhd Mz;fSk;> K/kpdhd ngz;fSk;> fy;tpia NjLtJ fl;lha flikahFk; vd;gJ egpnkhopahFk;.
fle;j rpy Mz;Lfspy; eilngw;w gj;jhk; tFg;G kw;Wk; gdpnuz;lhk; tFg;G nghJj; NjHTfspy; khztHfis tpl khztpfspd; NjHr;rp rjtpfpjNk mjpfkhf ,Ue;jJ. ,Ug;gpDk; ngz;fspy; gbg;gwpT ngw;wtHfspd; rjtpfpjk; Mz;fistpl FiwthfNt cs;sJ. ,jpYk; K];ypk; ngz;fspd; rjtpfpjk; Ntjid juf;$ba xd;whfNt mike;jpUf;fpwJ.  
1967-68-k; Mz;L yf;Ndhtpy; elj;jg;gl;l Ma;tpy; E}w;Wf;F  32 `pe;Jg; ngz;fs; gbg;gwptpy;yhjtHfs; vd;W epytuk; ,Ue;jNghJ K];ypk; ngz;fspy; 50 NgH gbg;gwptpy;yhjtHfshf ,Ue;jJ fz;lwpag;gl;lJ.
cjhuzkhf K];ypk; rKjhajpy; ngz; kUj;JtHfs; gutyhf ,y;yhj fhuzj;jhy; ek; rKjha ngz;fs; kfg;NgW fhyq;fspy; $l rhpahd kUj;Jtkidfis Njh;e;njLf;fj; njhpatpy;iy. tf;fpu vz;zk; nfhz;l rpy kUj;JtHfshy; rhjhuz gpurtq;fs; gy ,d;W rpNrupad;fshf khwptUfpd;wd. ,d;Dk; kUj;JtHfs; gl;lk; #l;bf;nfhz;l rpy kdpj muf;fHfs; K];ypk; ngz;fis FLk;gf;fl;Lg;hl;bw;F typAwpj;jpAk;> nra;Jk; tUfpwhHfs;. K];ypk; rKjhaNk rpe;jpf;f Ntz;lhkh? ek; rKjhaj;jpy; vj;jid ngz;fs; kUj;JtHfs; MfpapUf;fpwhHfs;? vj;jid ngz;fs; nghwpahsH gl;lk; ngw;wpUf;fpwhHfs;? vj;jid ngz;fs; Mrphpia MfpapUf;fpwhHfs;? vj;jid ngz;fs; muRg;gzpia mile;Js;shHfs;? tpuy; tpl;L vz;zf;f $ba rpyNu Kd;NdwpapUf;fpwhHfs;. ,e;j mty epiy khwp K];yp;k; ngz;fs; gbf;fTk;> gbf;f itf;fTk; Kd;tu Ntz;Lk;. mjw;F jFe;jhH Nghy trjp tha;Gfis Vw;gLj;jpj; ju ,e;j rKjhak; Kd;tu Ntz;Lk;.
fy;tpf; $lq;fspd; epiy
,d;iwa fhyfl;lq;fspy; ve;j xU rpwpa Ff;fpuhkkhf vLj;Jf; nfhz;lhYk; mq;Nf muR Muk;gg;gs;sp vd;W xd;Wk; mjw;F rkPg njhiytpNyNa nkl;hpFNy\d; gs;sp vdWk; ,y;yhky; ,Uf;fhJ vd;Nw $wyhk;. ,t;thW cUthd gy jdpahH fy;tp epiyaq;fshy; fy;tp tpahghukhf;fp tpl;lJ vd;gNj epjh;rdkhd cz;ik. kpfTk; trjp gilj;jtHfs; Nky;kl;l fy;tp epiyaq;fspy; jq;fs; Foe;ijfis nfhz;L NrHf;fpwhHfs;. eLj;ju trjp gilj;jtHfNsh mjd; khiaapy; tPo;e;J jhq;fSk; jq;fs; Foe;ijfis Kz;babj;Jf; nfhz;L NrHf;fpwhHfs;.
,J Nghd;W NrHf;fg;gLk; fy;tp epiyaq;fspd; epiyia rpe;jpf;f kwe;J tpl;lhHfs;. gpw kjj;jtHfshy; elj;jg;gLk; fy;tpf; $lq;fspy; mtHfs; kjf; fyhr;rhuj;ijf; fy;tpNahL NrHj;Jf; fw;gpf;fpwhHfs;. mjpfkhd fy;tp epiyaq;fspy; Mz;fSk;> ngz;fSk; fye;J gbf;Fk; #o;epiyapNyNa ,Uf;fpd;wJ. ,jdhy; mq;Nf fy;tp Nghjpf;fg;gl;lhYk; xOf;fk; rPHFiye;J tpLfpwJ.
,d;iwa fy;tpf; $lq;fspy; gy gbj;juq;fs; cs;sd. khw;Wkjj;jtHfshy; elj;jg;gLgitfs;> rpWghd;ik kf;fs; eyd; fUjp kf;fs; ed;nfhilfspy; cUthf;fg;gl;l epWtdq;fs;> muRf; fy;tp epWtdq;fs;> gzj;ij kl;Lk; Fwpf;Nfhshff; nfhz;L Muk;gpf;fg;gl;litfs; vd mjpfkhd fy;tp epiyaq;fs; cUthfpapUf;fpd;wd. ,J Nghd;w fy;tpia tpahghukhf;Fk; fy;tpf;$lq;fshy; K];ypk;fSf;F jukhd fy;tp vd;gJ vl;lhf; fdpahfNt ,Ue;J tUfpwJ. muRg; gs;spfspd; fy;tpj;juNkh kw;w jdpahH gs;spfis tpl Fiwthfj;jhd; ,Ug;gJ midtUk; Vw;ff; $ba xd;W.
,d;W jkpofj;jpy; K];ypk; rKjhaj;jpduhy;> gdpnuz;L nghwpapay; fy;Y}upfSk;> gj;njhd;gJ ghypnlf;dpf;FfSk;>  Vuhskhd I.b.I f;fSk;> fiyf;fy;Y}upfSk;> Ie;J ngz;fs; fiyf;fy;Y}upfSk; elj;jg;gLfpd;wd. ,q;nfy;yhk; mjpf mstpy; ekJ rKjha khztHfs; te;J gbf;f Kaw;rpfs; Nkw;nfhs;sg;gl Ntz;Lk;. mf;fy;tp epWtdq;fSk; K];ypk; khztHfSf;F gy rYiffis mspf;f Kd;tu Ntz;Lk;.
K];ypk;fs; gutyhf trpf;Fk; flY}u;> tpOg;Guk;> jQ;rhT+u;> jpUth&H> kapyhLJiw> jpz;Lf;fy; Nghd;w gFjpfspy; rKjhaj;jpduhy; elj;jg;gLk; nghwpapay; fy;Y}upfs; - ghypnlf;dpf;Ffs; ,y;yhjJ ngUk; FiwahfNt ,Uf;fpwJ. mJNghy jHkGup> Nryk; Nghd;w tlNkw;F khtl;lq;fspy; jukhd fy;tpia juf;$ba tifapy; njhlf;fg; gs;spfs; epWtg;gly; mtrpakhFk;.
K];ypk;fspy; ngUk; gzk; gilj;j nry;te;jHfSk; ,Uf;fj;jhd; nra;fpwhHfs;. Kd;G tho;e;j rKjha ngUk;gzf;fhuHfshy; cUthf;fg;gl;l fy;tp epiyaq;fs; rpy ,Ue;jhYk; ,d;Dk; gy rpwe;j fy;tpf;$lq;fis rKjha Nrit Nehf;NfhL K];ypk; nry;te;jHfs; mikf;f Kd; tUthHfNsahdhy; ek; rKjhaj;jpy; kUj;JtHfSk;> nghwpahsHfSk;> gl;ljhhpfSk;> MrpupaHfSk;; gyH cUthf toptFf;Fk;.  

khHf;f fy;tpf; $lq;fspd; epiy
vtH khHf;f fy;tpia fw;f nry;fpwhHfNsh> mtH jpUk;gTk; tiuapy; ,iwtopapy; nry;gtuhthH vd;W egp(]y;) mtHfs; $wpdhHfs;. - mwptpg;gtH: md];(uyp) - E}y;: jpHkpjp
khHf;ff; mwpit ngUtjpd; mtrpak;>  ehk; ,];yhk; Vtpaij vLj;Jk; jLj;jittpl;L tpyfpAk; tho;tNjahFk;. kWf;f Kbahj cz;ik vd;dntd;why; mjpfkhNdhH FLk;g tUikapd; fhuzkhf kju]hf;fspy; khHf;ff; fy;tp fw;gjw;fhf js;sg;gLfpwhHfs;. ,d;iwa kju]hf;fspy; gy Mypk;fSk;> `hgp];fSk; cUthfpf; nfhz;Ljhd; ,Uf;fpwhHfs;. tUlh tUlk; gl;lk; thq;fp kfpo;rpahf ntspNaUk; vy;yh Mypk;fSf;Fk;> `hgp];fSf;Fk; Ntiy fpilj;J tpLfpwjh? VNjh rpyUf;Fj;jhd; me;j tha;g;G. mtHfSf;F mspf;fg;gLk; CjpaKk; mw;gkhd xd;whfj;jhd; ,Uf;fpwJ. mtHfs; fw;w fy;tpahdJ kWikf;Fg; kpfTk; gad; juf;$ba xd;Wjhd;. Mdhy; mijf; nfhz;L mtHfs; ,e;j cyfpy; tho;thjhuq;fisj; Njbf; nfhs;s KbAkh? vd;W ghHj;jhy; re;Njfj;jpw;Fwpa xd;whfNt ,Uf;fpwJ. ,jd; fhuzkhf rpyH fw;wijf;$l kwe;J fhRf;fhf khHf;fj;ij khw;wptpLfpwhHfs;.
khHf;f mwpQHfs; ahH jtW nra;jhYk; jl;b Nfl;Fk; JzpT kpf;ftHfshy; ,Uf;fNtz;Lk;. Mdhy; rpy CHfspy; Ntiy gwpNgha;tpLNk vd;W gae;J gy Mypk;fs; me;j Chpd; Kf;fpa];jHfspd; tl;b> kUmUe;Jjy;> %lgof;ftof;fq;fs; Nghd;wtw;iw fz;Lk; fhzhJk; ,Ue;JtpLfpwhHfs;.
Mypk;fisAk;> `hgp];fisAk; cUthf;Fk; fy;tp epWtdq;fs; mtHfSf;Fk; nty;lH> gpl;lH> gpsk;gH> fk;g;A+l;lH kw;Wk; etPd njhopw; Gul;rpfSf;F Vw;whw; Nghy Kiwahd gapw;rpfs; mspj;J cUthf;Fkhdhy; mtHfs; Ra njhopy; nra;J mtHfspd; fz;zpaj;ijAk; fhj;Jf;nfhs;thHfs; NkYk; Vio gzf;fhuHfs; vd;W ghuhky; midthpd; jtw;iwAk; jl;b Nfl;L ey;y xU rKjhaj;ij cz;lhf;FthHfs; vd;gjpy; vs;ssTk; re;Njfkpy;iy.
mNj Nghd;W ngz;fSf;fhd Ranjhopy; njhlq;Ftjw;fhd rpWrpW gapw;rpfs;> ijay; kw;Wk; tPl;Lg;guhkhpg;Gfs; Nghd;w tho;tpy; cWJizahf ,Uf;Fk; rpy gapw;rpfisg; ghlj;jpl;lj;NjhL NrHj;J je;jhy; mtHfs; %yKk; xU rpwe;j rKjhak; cUthFk;.
,d;iwa jkpof kju]hf;fspd; epiyia vLj;Jf;nfhz;lhy; epjpg;gw;whf;Fiw xU ngWk; Fiwahfj;jhd; cs;sJ. VNjh rpy ey;Ys;sk; gilj;jtHfs; jUk; ed;nfhilfshy; ,J Nghd;w rKjhag; gzpfs; njhlHe;J njha;tpy;yhky; eilngw;Wf; nfhz;bUf;fpd;wd.
khwptUk; fhtp muR Md;kPf kju]hf;fSf;F jPtputhj gapw;r;rpf; $lq;fs; vd Nghyp Kj;jpiuapl;L epue;jukhf %btpl re;jHg;gk; ghHj;Jf; nfhz;bUf;fpwJ. K];ypk; rKjhaj;jpduhy; elj;jg;gLk; rpWghd;ikf; fy;tp epWtdq;fSf;F fpilj;J tUk; nrhHg;g khdpaj;ijAk; epWj;jptpl Nfhhpf;iffs; tYg;ngw;wthNu ,Uf;fpd;wd. ,f;Nfhhpf;iffs; epiwNtWkhdhy; K];ypk; rKjhaj;jpy; khzt kzpfis ntFthfNt ghjpj;JtpLk;.
Mf;fk; : khypf; ([pj;jh)
நன்றி : www.tamilislam.com

Tuesday, August 23, 2011

இளைஞர்களை ஆன்மீகம் எனும் கயிறு கொண்டு கட்டிப்போடுகின்றனர்

உலகமயத்தின் உப விளைவுகளில் ஒன்று ஹைடெக் சாமியார்கள். மனதை ஒரு கேணி என்றார் வள்ளுவப் பேராசான். அதில் தோண்டத் தோண்ட அறிவு ஊற்றெடுக்க வேண்டும் என்றார் அவர். ஆனால் இப்போது புதிது புதிதாக முளைக்கும் சாமியார்கள் மனதைத் தோண்டித் தோண்டி மாயையை வெட்டி யெடுக்கச் சொல்கிறார்கள். பன்னாட்டு, மென்பொருள் நிறுவனங்களில் பணி யாற்றும் இளைஞர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். பணிச்சுமையால் அவர்களது மனக் கிணறு வறண்டு போகிறது. மதுவிருந்து வைத்து அவர்களை மயங்கவைக்க முயல்கின்றனர். அதில் மயங்காத இளைஞர்களே ஆன்மீகம் எனும் கயிறு கொண்டு கட்டிப்போடுகின்றனர்.

மூச்சுவிடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கிறார் ஒரு பூஜ்யஸ்ரீ. பிரசாதத்தில் லாகிரி வஸ்துகளை கலந்துகொடுத்து மூளையை முனை மழுங்க வைக்கிறார் கல்கி சாமியார் என்பவர்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஆங்கிலத்தில் பட்டிணத்தாரை படியெடுக்கிறார் சுகபோதானந்தா.
இவர்களில் சத்குரு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ் தனி ரகம். அவரது பேச்சும் எழுத்தும் ஒரு மயக்க நிலைக்கு தள்ளும். அவ்வப்போது இவர், அரசியலும் பேசுவார். அன்மையில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றிற்கு “கறுப்புப்பணம் பதுக்கியோர் தேசத் துரோகிகள்... பாய்கிறார் ஜக்கி வாசுதேவ்” என்று தலைப்பு கொடுத்திருந்தது ஒரு நாளேடு. அடப் பரவாயில்லையே... என்று படிக்கத் துவங்கினால் அழகாக முடிச்சு அவிழ்க்கிறார் இந்த சத்குரு.

தலைவர்கள் சரியாக இருந்தால் தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத் ஒரு முன்னூதாரணம் என்று மோடிக்கு முட்டுக்கொடுக்கிறார் இவர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்மக்களைக் கொன்று குவித்ததுதான் மோடியின் சாதனை. அவர் சரியாக இருக்கிறார் என்று சான்றிதழ் கொடுப்பதிலிருந்தே இவர் சரியான ஆள் இல்லை என்பது சட்டெனத் தெளிவாகிவிடுகிறது.

பாபா ராம்தேவ் அறக்கட்டளைக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறாரே என்று ஜக்கியிடம் கேட்டதற்கு, இவர் கேள்வி முடிவதற்கு முன்பே “இதில் என்ன தப்பு. அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தால் என்ன? அவர் எளிமையாகத்தானே இருந்தார்?” என்று பதில் சொல்லியிருக்கிறார். இது ராம்தேவ் அறக்கட்டளைக்கு வக்காலத்து வாங்கி சொன்ன பதிலாக மட்டும் தெரியவில்லை. இவர் நடத்தும் அறக்கட்டளைக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கிறதோ தெரியவில்லை. இவரும் எளிமையாகத்தான் இருக்கிறார்.

பற்றற்ற ஞானிகள் வளைத்து வளைத்து சொத்து சேர்ப்பதன் மர்மம்தான் விளங்கமாட்டேன் என்கிறது. அறக்கட்டளை என்று சமாளிப்பதெல்லாம் இவர்கள் வைத்திருக்கும் தாடியைப் போன்றது தான். கேட்டால், எனக்கும் அந்த தாடிக்கும் சம்பந்தம் இல்லை என்பார்கள்.

சாய்பாபா படுக்கையறையிலிருந்து 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “அவரது உயரத்திற்கு 12 கோடி ரூபாய்யெல்லாம் ஒன்றுமே இல்லை. பக்தர்கள் கொடுத்தது, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார்” என்று வாசுதேவ் விளக்கமளித்திருக்கிறார். வாங்கி ஓரமாக வைத்ததுதான் 12 கோடி ரூபாய். மையமாக வைத்தது எவ்வளவு என்பது குறித்து தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

பாபா பயன்படுத்திய படுக்கையறையை திறந்து பார்த்தபோது அதில், 11.57 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி இருந்திருக்கிறது. அடுத்த அறையை திறந்தபோது ரூ.76லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கிடைத்துள்ளன. அடுத்தகட்டமாக மேலும் ஒரு அறையை திறந்தபோது 34.5 கிலோ தங்கம், மற்றும் 340 கிலோ வெள்ளி, ஒரு கோடியே 90லட்சத்து 53ஆயிரத்து 899 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. மேலும் ஒரு அறையை திறந்தபோது 1.5 கிலோ தங்கம், ரூ.32லட்சம் ரொக்கம், 734 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி சிம்மாசனம், வெள்ளி பாதுகைகள் கிடைத்துள்ளன.

இதெல்லாம் ஜக்கியின் வார்த்தையில் சொல்வதானால் பாபா ஓரமாக வாங்கி வைத்தவை. பாபாவின் மகா சமாதி திறக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்று தரிசனம் செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக ஆசிரம நிர்வாகிகள் சிலர் பல லாரிகளில் தங்கத்தையும் ரொக்கத்தையும் கடத்தியுள்ளனர். அவ்வாறு மக்கள் கொடுத்த பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடியவர்களை பாபாவின் சக்தி தடுக்கவில்லையா? போலீசார் சிலரை பிடித்திருக்கின்றனர்.

பாபா உயிருடன் இருக்கும்போது அவரை கொலை செய்ய சில சீடர்கள் முயற்சித்துள்ளனர். பாபா ஓடிச்சென்று அறைக்குள் தாழிட்டுக் கொண்டார். தனது உயரத்தை பயன்படுத்தி அந்த சீடர்களை பஸ்பமாக்கவில்லை.

பாபா ஆசிரமத்தில் இப்போது கிடைக்கும் ஆபரணங்களில் சின்ன சின்ன மோதிரங்கள் அதிகமாக இருக்கிறதாம். பாபா பலருக்கு மோதிரம் வரவழைத்துக்கொடுத்ததை இந்தச் செய்தியோடு இணைத்துப்பார்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. பாபாவின் உயரமே வேறு.

சி.டி.புகழ் நித்தியானந்தா சாமிக்கும் உலகம் முழுவதும் சொத்து உள்ளது. அமெரிக்காவிலும் கூட ஆசிரம் இருக்கிறது. கதவைத் திற காற்று வரட்டும் என்று உபதேசித்த இவருக்கு சிறைக்கதவும் திறந்தது. ஜாமீனில் வெளியே வந்த இவர், குண்டலினியோகத்தை பயன்படுத்தி அந்தரத்தில் பக்தர்களை மிதக்கவிடப் போவதாக பெருமளவு விளம்பரம் செய்தார்.

பெரும் கூட்டம் கூடியது. அந்தரத்தில் பறக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக சிலர் ஹெல்மெட் கூட அணிந்திருக்கிறார்கள். கடைசியில் நித்தியானந்தா ஒரு பிரம்பை வைத்து ஆட்ட பக்தகோடிகள் உட்கார்ந்த இடத்திலேயே தவளையைப்போல குதித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் உருண்டு புரண்டார்கள். ஆனால் யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை. கடைசியில் நான் சொன்னதை யாரும் சரியாக கேட்கவில்லை. அதனால்தான் பறக்கமுடியவில்லை என்று நித்தி நெத்தியடியாக அடித்து விட்டார். இவர் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு சென்றபோது பாஸ்போர்ட், விசாவோடு விமானத்தில் பறந்தாரா அல்லது குண்டலினி சக்தியை பயன்படுத்தி அந்தரத்தில் பறந்து அப்படியே போய்விட்டாரா என்று தகவல் இல்லை.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று ஜக்கி வாசுதேவ் கூறுவதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் சாமியார்கள் பதுக்கிவைத்துள்ள பணம் கறுப்புப்பணம் இல்லை போலிருக்கிறது. கேட்டால் இது காவிப்பணம் என்பார்கள்.

மதுக்கூர் இராமலிங்கம்

THANKS : keetru.com

Monday, August 22, 2011

இணையதளத்தில் சமச்சீர் கல்வி புத்தகம் வெளியீடு

6 முதல் 10 -ஆம் வகுப்புக்கான பாடதிட்டம் சம்மந்தான குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழக அரசு பாட புத்தகங்களை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


இந்த இணையதளத்திற்க்கு சென்று பாட புத்தங்களை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

வெளி நாடுகளில் உள்ள பெற்றொர்கள் கவனத்திற்க்கு : உங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்கானிக்க, இணையதளத்தில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் (Download) செய்து தினமும் தங்கள் பிள்ளை எவ்வளவு படம் படித்து உள்ளது, என அறிந்து கொள்ளலாம், வாரம் ஒரு முறை இந்த புத்தகங்களை வைத்து கொண்டு குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவர்களின் கல்வி திறன் எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ளலாம், போதியபாடங்கள் படிக்கவில்லை என்றால் அதிக முயற்சி எடுத்து கண்கானிக்கலாம்.

வெளியூரில் இருந்தாலும் பிள்ளைகளின் கல்வி வளர்சியை கண்கானிக்க இந்த இணையதள புத்தகம் பயனுல்லதாக இருக்கும்.

தகவல் எஸ்.சித்தீக் எம் டெக்

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு

டெல்லி: டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.

நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

THANKS : THATSTAMIL.COM

Friday, August 19, 2011

நாமெல்லாம் மனிதர்கள் தானே..?

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)


உலகில் சிறுவர் தினத்தன்று மட்டும்தான் சிறுவர்களையும், குழந்தைகளையும் கூர்ந்து கவனிப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம். அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள். வளர்ந்தவர்களாகிய எம்மைப் பார்த்துத்தான் தங்கள் எதிர்கால அசைவுகளை வளர்த்துக் கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். உலகை நல்லதாகவோ, தீயதாகவோ பார்க்கும் பார்வைகளை, சிறுவர்கள் பெரியவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? நமது குழந்தைகளின் தேவைகளுக்குக் கூட செவி மடுக்கவியலாதவர்களாக, நமது குழந்தைகளின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கவியலாதவர்களாக மிகுந்த வேலைப்பளுவுள்ளவர்களாக இருக்கிறோம். குழந்தைகளையும் கவனிக்கவியலாமல், தன்னையும் ஒழுங்காகக் கவனிக்கவியலாமல் ஓடியோடி உழைப்பதெல்லாம் யாருக்காக?

எங்களைச் சூழவுள்ள அழகான ஆடைகள், தீப்பெட்டிகள், சப்பாத்துக்கள், இரும்புச் சாமான்கள், உணவுப் பாத்திரங்கள் இப்படி எல்லாப் பொருட்களிலும் அப் பிஞ்சு விரல்களின் மெல்லிய ரேகைகள் படிந்தேயிருக்கின்றன. நாம் தான் அவற்றைக் கண்டு கொள்வதேயில்லை.

கீழேயுள்ள படங்களைப் பாருங்கள். தனது அடுத்த வேளை உணவுக்குக் கூட தானுழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்கள் இவர்கள். சமூகத்தால் மீட்கப்பட வேண்டியவர்கள்.

வெள்ளி உணவுப் பாத்திரத் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.

இரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்யுமொரு சிறுவன்

எரிக்கப்பட்டு புகையெழும்பும் பாரிய குப்பைக் குவியலை, ஏழே வயதான குழந்தை, பனிக்கால குளிர் காலையொன்றில் கிளறுகிறாள். இக் குப்பைக்குள்ளிருந்து கிடைக்கும் பேப்பர், இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து விற்றுக் கிடைக்கும் பணத்தின் மூலம் தனது குடும்பத்துக்கு உதவுவதாகக் கூறுகிறாள்.

கல்லுடைக்கும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள்

செங்கல் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள்.
இப் படங்களைப் பார்க்கும் முன்பு நீங்களும், உங்கள் குழந்தைகளும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகளென எண்ணிக் கொள்ளுங்கள்.

ரிக்ஷா உதிரிப் பாகங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை பார்க்கும் எட்டே வயதான குழந்தை .

கதவுகளின் இரும்புப் பாகங்களைச் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கிறான்.

விளையாட்டுக்களின் மூலமும், சமூகத்தைக் கூர்ந்து கவனித்தும் தங்கள் உள விருத்திக்களை அதிகரித்துக் கொள்ள வேண்டிய பருவத்திலுள்ள இவர்களைப் போன்ற பல இலட்சக்கணக்கான சிறுவர்கள் பலர் இன்று பல்வேறு வற்புருத்தல்களின் கீழ் இவ்வாறாகத் தொழில்புரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு சம்பளமோ, போதியளவு பாதுகாப்போ இல்லை.

உலகில் அனேகமான பெரிய மனிதர்கள் மனசாட்சி சிறிதேனுமின்றி அதிக இலாபத்துக்காகவும், இலவச உழைப்புக்காகவும் சிறுவர்களைப் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.

உலகில் பல்வேறுபட்ட தொழில்களிலும் பல சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உங்களுக்காகவே உழைக்கும் இவர்கள் சின்னஞ்சிறிய வேலைக்காரர்கள்.

உள்ளுக்குள் எந்த உறுத்தலுமின்றி இவர்களைப் உங்களால் பார்க்க முடிகிறதா?

Thursday, August 18, 2011

சகோதரர்களே! ரமழானிடம் ஜெயிக்க வேண்டாமா...

வருடத்திற்கு ஒரு ரமழான் வருகிறது. முப்பது நாட்கள் நோன்பு வைக்கிறோம். இறுதியாக ஒரு பெருநாள் தொழுகை. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன வேலை? என்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவர்கள் நிறையப் பேர் நம்மிலே உள்ளார்கள். இதற்குக் காரணம் என்னவெனில் ரமழானின் முக்கியத்துவம் தெரியவில்லை, ரமழானை நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை.

ஆம் சகோதரர்களே! ரமழானிடம் நாம் ஜெயிக்க வெண்டாமா?

ஒவ்வொரு வருடமும் நம்மைத் தாண்டி செல்லும் புனித மிக்க ரமழானை நாம் சரியாகப் பயன்படுத்துவதே ரமழானை நாம் ஜெயித்துவிட்டோம் என்பதற்கான சரியான பதிலாக இருக்க முடியும்.

பொதுவாக ரமழானில் நாம் செய்யும் காரியங்களை பட்டியல் போட்டுப் பாருங்கள். என்னெவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஸஹர் உணவை நேர காலத்தோடு உண்டுவிட்டு அவசர அவசரமாக சென்று படுத்துறங்குகிறோம். அப்படியானால் சுப்ஹுத் தொழுகை ? அதன் கதி அதோ கதி தான்.

காலை பத்து மணிக்கு மேல் எழும்பி அதன் பின்னர் நம்முடைய மற்ற காரியங்களை செய்ய ஆரம்பிக்கிறோம் பெரும் பாலும் லுஹர், அசர், மஃரிப், இஷாவுடன் சேர்த்து இரவுத் தொழுகை என்று மற்ற தொழுகைகளை எப்படியோ தொழுது விடுகிறோம்.

அதிலும் சிலருக்கு லுஹர் தொழுகை உண்டு அதன் பின் ஒரு தூக்கம் போட்டால் அசர் இல்லை. நோன்பு திறப்பதற்குத் தான் கண் விழிப்பார்கள்.

இஷா தொழுகையுடன் சேர்த்து இரவுத் தொழுகையையும் தொழுதுவிட்டு நிம்மதியாக கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் தூக்கத்தில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும் ஆனால் பெரும்பாலானவர்களின் நிலை அதுவன்று.

ரமழான் காலம் என்றால் இரவு முழுவதும் கூத்தும் கும்மாலமும் நிறைந்திருக்கும் பகல் முழுவதும் ஊரே அடங்கிப் போகும் அளவுக்கு தூக்கத்தில் மூழ்கியிருக்கும். இன்னும் சிலரின் பகல் நேர இரவு நேர வேலையாக, பொழுது போக்கும் காரியமாக தொலைக்காட்டி பார்த்தல் தான் அமைந்திருக்கும்.

இனி எப்படி நாம் ரமழானை ஜெயிப்பது ?

ரமழானை ஜெயிப்பதற்கான சில அறிவுரைகள்.
புனிதமிக்க ரமழான் மாதத்தை ஜெயித்து மறுமையில் வெற்றி பெறுவதற்காக ரமழானை நாம் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சில செய்திகளை இங்கு குறிப்பிடுகிறோம்.

ரமழான் பற்றி குடும்பத்தினருடன் ஆலோசனை செய்யுங்கள்.
முதலாவதாக நாம் எதிர் நோக்க இருக்கும் ரமழான் மாதம் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு ஆலோசனை செய்யுங்கள். ரமழான் மாதத்தை பிரயோஜனமானதாக கழிப்பதற்குறிய கருத்துக்களை அவர்களிடம் இருந்து எதிர்பாருங்கள்.

உங்கள் கணவர், பிள்ளைகள், தாய், தந்தை, உங்கள் கணவரின் தாய், தந்தை, உங்கள் தம்பி, தங்கைள் என்று அனைவரையும் ஒன்று கூட்டிக் கூட இந்த ஆலோசனையை நீங்கள் செய்யலாம். ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவிக்கும் போது அதில் சிறந்த கருத்துக்களை தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் ரமழான் மாதத்தின் செயல்பாடுகளை நீங்கள் அமைத்துக் கொள்ள முடியும்.

தொழுகையை சரியாகப் பேணுதல்.
ரமழான் காலம் என்பது நமது வாழ்வை சரியாக அமைத்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சிக் களமாகும் அந்த பயிற்சிக் காலத்தை சரியாக நாம் பயன்படுத்த முனைய வேண்டும்.  அந்த அடிப்படையில் தொழுகையை சரியாக பேணுவதற்கு நாம் நம்மை பழக்கிக் கொள்வதற்கு ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைவது இந்த ரமழானுடைய காலம் சரியான நேரத்தில் ஜமாத்துடன் சேர்ந்து நாம் தொழுவதால் நமது வாழ்வை சரியாக வழப்படுத்திக்கொள்ள அது பெரிதும் உதவியாக இருக்கும்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, மக்கள் தொழுது விட்டார்களா?” என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினோம். அப்போது பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, மக்கள் தொழுது விட்டார்களா?” என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னோம். அப்போது, பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, மக்கள் தொழுது விட்டார்களா?” என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள்” என்று சொன்னோம். அப்போது பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ், நூல்: புகாரி 687

தனக்கு எழுந்து நிற்கவே முடியாது என்ற நிலை இருந்தும் நபியவர்கள் தொழுகையை விடுவதற்க விரும்பவில்லை. ஏன் என்றால் தொழுகை என்பது அவ்வளவு முக்கியமான ஒரு செயல். அதனால் தான் நபியவர்கள் இவ்வளவு கஷ்டம் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.  நாமும் இந்த ரமழான் காலத்தை தொழுகையை சரியாக அமைத்துக்கொள்ளக் கூடிய பயிற்சிக் களமாக மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.

குர்ஆன் ஓதுதல்.
திருமறைக் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மிக்க மாதமாக  இந்த ரமழான் மாதம் தான் இருக்கிறது. இம்மாதத்தில் அதிகமதிகம் நாம் குர்ஆனை ஓத வேண்டும்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)

நமது வீடுகளில் திருமறைக் குர்ஆனை ஓதுவதின் மூலமாக நமது பிள்ளைகளும் அதைப் பார்த்து பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக அது மாறிவிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை,ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அல்பகரா‘ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1430

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான். அந்த ஏட்டிலிருந்து இரண்டு வசனங்களை அருளினான். அந்த இரண்டைக் கொண்டு சூரத்துல் பகராவை முடித்தான். மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அவ்வீட்டை நெருங்கியே தீருவான்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதி 2807

ரமழான் மாதத்தில் ஆண், பெண் என்று அனைவருக்கும அதிகமான நேரங்கள் கிடைப்பதால் அந்த நேரத்தை திருமறைக் குர்ஆனை ஓதுவதின் மூலம் பிரயோஜனப் படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு “ஜுஸ்வு” ஓதினால் முப்பது நாட்களில் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்த நன்மையை நாம் பெற்றுவிட முடியும். அதே போல் குர்ஆனை ஒதுவதுடன் இணைத்து அதன் மொழி பெயர்பையும் படிக்கும் போது திருமறையில் உள்ளார்ந்த, உயரிய கருத்துக்களை நாம் நமது வாழ்வில் நடை முறைப்படுத்துவதற்கு வசதியாக அது அமையும்.

அண்டை வீட்டாரை கவணித்தல்.
ரமழான் மாதம் என்பது அனைவரையும் அரவணைக்கும் ஓர் உண்ணத மாதமாகும். அம்மாததில் நாம் நம்முடைய அண்டை வீட்டாருடன் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் நடக்க முயற்சிக்க வேண்டும். ஏன் என்றால் பொருமையின் மாதத்தில் நாம் நமது அண்டை வீட்டாருடன் சரியான முறையில் வாழ்ந்து பழகும் போது அது மற்ற மாதங்களிலும் நாம் சரியாக இருப்பதற்கு ஒரு அடிப்படையாக அமைந்து விடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 73
நம் மூலமாக நமது அண்டை வீட்டாருக்கு எந்த ஒரு தீங்கும் நடக்காமல் இருக்கும் அளவுக்கு நாம் அவர்களுடன் சிறப்பான முறையில் பழகுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

உறவினர்களுக்கு மார்க்க விஷயங்களை எத்தி வைத்தல்.
கிடைக்கும் நேரங்களில் நமது உறவினர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய செய்திகளை எத்தி வைப்பதற்கு முனைய வேண்டும். அது காலை நேரமாக இருக்களாம் அல்லது இரவுத் தொழுகைக்குப் பின் கண்டவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை விடுத்து அந் நேரத்தில் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு மார்க்கத்தின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை நன்மையான காரியங்களை நாம் சொல்லிக் கொடுக்கும் போது அவர்களும் அதன் படி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுத்த நன்மையை அடைந்து கொள்வோம்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீரலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-2)
நன்மையான காரியங்களில் அதிகமதிகம் ஈடுபடுபவர்களாக ரமழான் மாதத்தில் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரவில் நின்று வணங்குதல்.
ரமழான் மாதத்திற்கு என்று சிறப்பான எந்தத் தொழுகையும் இல்லாவிட்டாலும் மற்ற காலங்களில் தொழும் இரவுத் தொழுகையை விட ரமழான் மாத்த்தில் தொழும் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதை நாம் காணமுடிகிறது. எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழ வேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

யார் ரமளானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் தொழுகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.
இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டுகின்றன. நின்று வணங்குவது என்றால் நபியவர்கள் எவ்வாறு நின்று வணங்கினார்களோ அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபியவர்கள் பதினொரு ரக்அத்களே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நிறைய பிரார்த்தனைகளை செய்தல், பாவ மண்ணிப்புத் தேடுதல்.
நோன்பு பிடித்துக் கொண்டிருப்பவர் நிறைய பிரார்தனைகளை செய்ய வேண்டும். தனக்கு தேவையான கோரிக்கைகளை நோன்பாளியாக இருக்கும் நேரத்தில் இறைவனிடம் எடுத்து வைக்கும் போது அதற்கு இறைவன் நிறைய பலன்களைத் தருகிறான். மற்ற காலங்களில் நாம் நிறைய பாவங்கள் செய்திருப்போம் அந்தப் பாவங்களுக்குறிய பரிகாரமாக இந்த ரமழான் மாதத்தைப் பயன்படுத்தி இறைவனின் பாவ மன்னிப்பை கேட்க்க வேண்டும்.

இஃதிகாப் இருத்தல்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.
இதன் அடிப்படையில் நாமும் அந்த நாட்களில் இஃதிகாப் இருந்து நன்மைகளை அடைந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஒருவருக்காவது நோன்பு திறக்க உதவுதல்.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு, நோன்பு திறப்பதற்கு வசதியில்லாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவருக்காவது நாம் நோன்பு நோற்பதற்கான அல்லது திறப்பதற்கான உதவிகளை செய்து கொடுக்கும் போது அவர்களின் மனது சந்தோஷத்தில் நிறைந்து விடுவதுடன், நாமும் சந்தோஷமாக இருந்து இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பித்ராக்களை சரியாக வழங்குதல்.
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை,அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும். ஏழைகளுக்கான இந்த தர்மத்தை நாம் மனமுவந்து வழங்கும் போது நிறைய நன்மைகள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன.

நல்ல வார்த்தைகளை பேசுதல்.
நோன்பு காலம் என்பது பொருமையான மாதம் என்பதால் அம்மாதத்தில் நாம் நமது நாவைப் பேணுவதில் மற்ற மாதங்களைவிடவும் இம்மாதத்தில் மிகவும் அதிகமாக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
தீய வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள், கெட்ட எண்கங்களை உண்டாக்கும் பேச்சுகள், சினிமாப் பாடல்கள் போன்றவற்றை விட்டும் நாம் ஒதுங்கிவிட வேண்டும். அவ்வாறு ஒதுங்கும் போது, இதுவே நமது பயிற்சியாக உருவெடுத்து மற்ற மாதங்களிலும் நாம் சரியாக இருப்பதற்கு உதவியாகி விடுகிறது.

மார்க்கத்தைப் பற்றிய செய்திகளை தேடிப்படித்தல்.
நிறைய நேரம் கிடைக்கிறது என்ன செய்வதென்று தெரியவில்லை என ரமழான் காலத்தில் நிறையப் பேர் தவிப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் செய்வதற்கான ஒரு அருமையான காரியம் மார்க்த்தைப் பற்றிய புத்தகங்கள்ப் படிப்பது அல்லது எழுதுவதாகும்.
இது போன்ற வேலைகளை செய்யும் போது நம்மை அறியாமல் நிறைய விஷயங்களைப் படித்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும் அதனை சொல்லிக் கொடுக்க முடியும்.

பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல்.
ரமழான் மாதத்தைப் பொருத்தவரையில் நிறைய பயான் நிகழ்ச்சிகள் மார்க்கப் பிரச்சாரங்கள் செய்யப்படும் ஒரு மாதமாகும் இம்மாத்தில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நிகழ்த்தப்படும் பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது போன்ற செயல்பாடுகளில் அதிகமதிகம் நாம் ஈடுபடுவது நம்மை சிறப்பானவர்களாக மாற்றும் காரியமாகும்.

தாயின், மனைவியின் சமையலுக்கு உதவுதல்.
ரமழான் காலத்திலும் தாய், தந்தையர்களுக்கு உதவிகள் செய்து அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ள முனைய வேண்டும் அதிலும் குறிப்பாக தாயின் சமையலுக்கு, மனைவியின் சமையலுக்கெல்லாம் உதவுவதும் அதிகமாக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும்.
தந்தையின் வேலைகளுக்கு உதவுதல், தாயில் வேலைகளை இலகுவாக்குதல் போன்ற காரியங்களில் ரமழானில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும்.

குழந்தைகளுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள்.
குழந்தைகள் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான நேர அட்டவனை ஒன்றை தயார் செய்து குர்ஆன் ஒதல் பயிற்சி, இஸ்லாமிய பயான்கள் பார்க்க கேட்ட, குரான் கிராத்கள் கேட்பதற்கான பயிற்சிகள் என்பவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கும் போது அவர்கள் தமது ரமழான் காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.

தொலைக்காட்சியில் தீமையை நன்மையாக்குங்கள்.
ரமழான் காலத்தில் தொலைக்காட்சியில் நிறைய இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்பப்படும் அந்த நிகழ்ச்சிகளில் சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதுடன், பாவமான, கெட்ட நிகழ்ச்சிகளை விட்டும் நாமும் ஒதுங்கி நமது குழந்தைகளையும் காத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக…………………..

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.
 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (4:1)
ரமழானில் இறைவன் காட்டிய அடிப்படையில் அதிகமான நன்மைகளை செய்து ரமழானை ஜெயித்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

THANKS : ISLAMKALVI.COM